Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 24 பிப்ரவரி, 2021

கோணல் எத்தனை இருந்தாலும் குணமும், குறியும் மாறாது. அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------

தெறிக்க வைக்கும் ஜோக்ஸ்...!!

-------------------------------------------------------------

நீதிபதி : நீ திருட்டு ரயில் ஏறியா மும்பைக்கு வந்த?

குற்றவாளி : என்னது அது திருட்டு ரயிலா? இந்த விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.

நீதிபதி : 😠😠

-------------------------------------------------------------

மகன் : அப்பா உங்க பேர காப்பாத்துற மாதிரி இன்னிக்கு ஒன்னு செஞ்சுட்டேன்பா....

அப்பா : சபாஷ்டா மகனே... அப்படி என்னடா செஞ்ச..?

மகன் : எவ்வளவோ அடி வாங்கியும், திருப்பி ஒரு அடிகூட அடிக்கலைப்பா என் பொண்டாட்டியை...!

அப்பா : 😖😖

-------------------------------------------------------------

பொன்மொழிகள்..!!

-------------------------------------------------------------

🌟 உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்..

ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யக்கூடாது.

🌟 உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

🌟 அனுபவம் தான் அறிவு பெறுவதற்கான ஒரே வழி.

🌟 நாம் துன்பப்படுவது நம் செயல்களின் காரணமாகத்தான். அதற்கு கடவுள் பொறுப்பல்ல.

🌟 நீ பட்ட துன்பத்தைவிட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.

🌟 ஒரு மனிதனால் செய்யக்கூடிய சாதனையை, இன்னொரு மனிதனாலும் நிச்சயமாக செய்ய முடியும்.

-------------------------------------------------------------

விடுகதைகள்...!!

-------------------------------------------------------------

1. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும். அது என்ன? 

2. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும், குறியும் மாறாது. அது என்ன? 

3. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்? 

4. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன? 

5. தொட்டுவிட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள். அது என்ன? 

விடை :

1. பஞ்சு

2. கரும்பு 

3. காற்று 

4. முட்டை

5. தொட்டா சுருங்கிச் செடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!