------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு…!!
------------------------------------------------------
மனைவி : லட்டர்ல நிற்க... நிற்கன்னு எழுதாதீங்க.
கணவன் : ஏன்?
மனைவி : படிக்கிறவங்களுக்குக் கால் வலிக்கும்.
கணவன் : 😁😁
------------------------------------------------------
அமலா : என் மாமியார் ரொம்ப Strict
விமலா : எப்படி?
அமலா : கரெக்டா அரை மணி நேரத்துக்கு மேல சண்டைய நீடிக்க மாட்டாங்க.
விமலா : 😆😆
------------------------------------------------------
இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!
------------------------------------------------------
எக்கினாலும் விக்கினாலும் ஏசும் இந்த உலகம், சொக்கினாலும் துக்கினாலும் பழிக்கும் பாவ உலகம், நிமிர்ந்து நேர்மை பூண்டு செல்வோம் பரலோகம்.
நேசம் இல்லா இடத்திலே நாசம் என்றும் உள்ளதப்பா, ஆசையில்லா இல்லா இடத்திலே பூசையொன்றும் இல்லையப்பா, பாசம் உள்ள இடத்தினிலே வாசம் கொள்ளல் நல்லதப்பா.
------------------------------------------------------
மூளைக்கு வேலை...!!
------------------------------------------------------
1. ஒரு பெண் இரவில் தன் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் விளக்கும் இல்லை, மெழுகுவர்த்தியும் இல்லை, அறையும் கும்மிருட்டாக உள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அது எப்படி?
2. ஒரு ஆற்றின் கரையில் ஒரு நாய் இருந்தது. ஆற்றின் மறுகரையில் அந்த நாயின் உரிமையாளர் இருந்தார். நாயின் உரிமையாளர் நாயை அழைக்க நாயும் மறுகரைக்கு உரிமையாளரிடம் சென்று சேர்ந்தது. அந்த இடத்தில் பாலமும் இல்லை. நாய் ஈரமாகாமல் ஆற்றை கடந்தது எப்படி?
விடை :
1. அவர் கண்பார்வையற்றவர், அவர் படித்துக் கொண்டிருப்பது பார்வையற்றவர்கள் படிக்கும் 'பிரெயில்" எழுத்துக்களை.
2. ஆறு உறைந்து போயிருந்தது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக