Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்... டங்கு ஸ்லிப் ஆகுதா? - ரிலக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

--------------------------------------------------

அமலா : என்னடி, நீ வேலைக்காரி சேலையைப் போய் கட்டியிருக்க?

விமலா : அப்பத்தான்டி என் புருஷன் ஏறெடுத்தே என்னைப் பாக்குறாரு.

அமலா : 😂😂

--------------------------------------------------

மேகலா : என் முகத்துல புள்ளிகளா இருக்கு, அதை அழகுப்படுத்த ஒரு ஐடியா சொல்லு.

மஞ்சு : அந்தப் புள்ளிகளை இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.

மேகலா : 😏😏

--------------------------------------------------

தன்னம்பிக்கை வரிகள்...!!

--------------------------------------------------

தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

சோம்பேறித்தனமே வெட்கப்படவேண்டியது.

முயற்சிக்கு ஏற்றவாறு தான் வெற்றியும், தோல்வியும் இருக்கும்.

எப்படியும் முயற்சிக்கலாம். ஆனால்... முயற்சிக்காமல் இருக்காதீர்கள்.

--------------------------------------------------

விடுகதைகள்..!!

--------------------------------------------------

1. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன? 

2. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அவன் யார்? 

3. கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? 

4. எண்ணெய் வேண்டா விளக்கு, எடுப்பான் கை விளக்கு. அது என்ன? 

5. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது. அது என்ன? 

6. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன? 

விடை :

1. கடிகாரம்

2. தீக்குச்சி 

3. வேம்பு 

4. மெழுகுவர்த்தி 

5. புடலங்காய்

6. எழுமிச்சைபழம் 

--------------------------------------------------

அர்த்தங்கள் அறிவோம்...!!

--------------------------------------------------

மலைத்தேன் - மலையில் உண்டாகும் தேன், இன்சுவையுள்ள பலாப்பழம்.

மலைவீரியம் - அன்னபேதி.

வயிரித்தல் - மனம் முதலியன கடினமாதல், பிடிவாதமாயிருத்தல்.

வாயில்லாச் சீவன் - விலங்கு.

முன்னோர் - உழவில் முந்திச் செல்லும் ஏர்.

--------------------------------------------------

டங்கு ஸ்லிப் ஆகுதே...!!

--------------------------------------------------

கேடு கெட்ட உறவோடு கெட்ட மட்ட கருவாடு, கொண்டு வரும் வறுவோடு எடுக்க வைக்கும் திருவோடு.

கட முட மாட்டு வண்டி தட தட வென உருண்டு போயி மட மட வென கழுன்றதென்றால் பட பட வென நெஞ்சம் பதறாதோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக