Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

கொத்து கொத்தா முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க..

Simple Home Remedies To Prevent Hair Fall And Keep Your Hair Strong

குளிர்காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. ஏனெனில் குளிர்காலத்தில் வீசும் குளிர்ச்சியான காற்று முடியின் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, தலைமுடியை பலவீனமாகவும், எளிதில் உடையக்கூடியதாகவும் மாற்றும். அதனால் தான் குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வு, முடி வெடிப்பு மற்றும் கரடுமுரடான முடி போன்ற பல பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

இதைத் தவிர்க்க நாம் தலைமுடியை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த கெமிக்கல் கலந்த பொருட்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மோசமாக்கவே செய்யும். இதற்கு ஒரு சிறந்த வழி என்றால், இயற்கை பொருட்களால் தலைமுடியைப் பராமரிப்பது தான். கீழே குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி கொத்துகொத்தாக தலைமுடி உதிர்வதைத் தடுத்திடுங்கள்.

வெந்தயம்

வெந்தய விதைகளை தலைமுடிக்கு வலிமையாக்குவதோடு மட்டுமின்றி, மென்மையாகவும், பட்டுப்போன்றும் மாற்றும். அதற்கு சிறிது வெந்தயத்தை நுரில் ஊற வைத்து அரைத்து, அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியின் தடலி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

வெங்காயம்

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு அற்புதமான பொருள் தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை முடியின் வேர்ப்பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 3 முறை செய்தால், முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி தூண்டப்படும்.

கடுகு எண்ணெய்

பலவீனமான மற்றும் வறண்ட தலைமுடிக்கு கடுகு எண்ணெய் மிகவும் நல்லது. அதற்கு சிறிது கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும்படி தடவி மசாஜ் செய்து, ஒரு ஈரத்துணியால் தலையைச் சுற்றி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படுமாறு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, முடி மென்மையாகவும், பட்டுப்போன்றும் இருக்கும்.

முட்டை

முட்டை தலைமுடிக்கு ஊட்டத்தை அளித்து, மயிர்கால்களை வலுவாக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை பிரித்தெடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை தலைமுடியில் தடவ வேண்டும். பின் ஒரு மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்புவால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது நின்று, நன்கு வலுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக