
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தையும் விலைமதிப்பில்லா உயிரையும் இழந்து வருவதால் அந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்
நேற்று கூட சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு இலட்சக்கணக்கில் பணத்தை நஷ்டம் ஆக்கியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் இது குறித்த சட்ட மசோதா விரைவில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தெரிவித்திருந்தனர்
அந்த வகையில் சமீபத்தில் தமிழக சட்டசபை கூடிய நிலையில் சற்று முன்னர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது
இதனை அடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக