Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 பிப்ரவரி, 2021

சிக்னல் கிடைக்கல: அதனால் தான் ராட்டினத்தில் ஏறினேன்: அமைச்சரின் வைரல் புகைப்படம்.!

ராட்டினத்தில் ஏறினேன் என்

இப்போது 4ஜி உள்ள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்தபோதிலும் இன்னும் சில இடங்களில் செல்போன் சிக்னல் பிரச்சனை சற்று அதிகமாகவே உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நம்மில் பலருக்கும் சிக்னல் கோளாறு அவ்வப்போது ஏற்படும்.

இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம் குறைவது, அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்று பல்வேறு பிரச்சனைகள் எழும்.

நம் வாழ்வின் நீக்கமுடியாத அங்கமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நம் மனதை அதிகம் பாதிக்கும். குறிப்பாக இதனாலேயே நம் பணிகளில் தொய்வு நிலை ஏற்படலாம்.

அதிலும் இந்தியாவின் பல கிராமங்களில் இன்னும் மிகக் குறைவான சிக்னல் மட்டும் கிடைக்கும் நிலையில் உள்ளன. இதுபோன்ற ஒரு பிரச்சனையில் மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேந்திர சிங் மாட்டிக்கொண்டர். அதாவது செல்போன் பேசுவதற்கு சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்பதால் அவர் செய்த செயல் இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.

வெளிவந்த தகவலின்படி, மத்திய பிரதேச மாநிலம் பிரடாப்கர் மாவட்டம் பகுதியில் உள்ள அம்கோ என்ற கிராமத்திற்கு அரசு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார் அமைச்சர் பிரஜேந்திர சிங். அந்த சமயம் அவருடைய செல்போன் டவர் சரியாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் 50 அடி உயரமுள்ள ராட்டினத்தில் ஏறி பேசியுள்ளார் அமைச்சர். பின்பு இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போத அதிகமாக வைரலாகிவருகிறது. மேலும் இது குறித்து தெரிவித்த அமைச்சர் பிரஜேந்திர சிங், அந்த ஊர் மக்கள், ஊர் பிரச்சனைகள் குறித்து என்னிடம் எடுத்துரைத்தார்கள்.

எனவே பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசுவதற்காக அவர்களை தொடர்பு கொண்டேன். ஆனால் என்னுடைய செல்போனில் டவர் இல்லை. அதனால் தான் செல்போன் டவர் கிடைப்பதற்காக ராட்டினத்தில் ஏறினேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக