புக் மைஷோ (BookMyShow) நிறுவனம் இதுவரை புதிய திரைப்படங்களுக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மற்றும் தனியார் நிகழ்ச்சிக்கான டிக்கெட் புக்கிங் சேவையை செய்து வந்தது. ஆனால், தற்பொழுது அதன் சேவையை புதிய தோற்றத்தில், புதிய வழியில் துவங்கியுள்ளது. இப்போது நிறுவனம் 'BookMyShow Stream' என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தை உருவாகியுள்ளது. இது எப்படிச் செயல்படும் என்பதை பார்க்கலாம்.
BookMyShow Stream என்ற பெயரில் இப்போது நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் நெட்பிலிக்ஸ், அமேசான் வீடியோ போன்று திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கும். ஆனால், இந்த சேவை பரிவர்த்தனை வீடியோ-ஆன்-டிமாண்ட் (டி.வி.ஓ.டி) தளமாக செயல்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சேவையின் மூலம் ஸ்ட்ரீமிங் தளத்தில் உள்ள திரைப்படங்களை பயனர்கள் வாடகைக்கு அல்லது மொத்தமாக ஒரு தொகையை செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். முந்தைய காலத்தில் CD-களை நம் மக்கள் வாடகைக்கு எடுத்ததுப் போல் இனி ஆன்லைனில் திரைப்படங்களை நீங்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். புதிய திரைப்படம் முதல் பழைய படம் வரை சுமார் 600 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இந்த தளம் கொண்டுள்ளது.
72,000+ மணிநேர உள்ளடக்கத்துடன், இந்த தளத்தைப் பற்றிய ஒரு சிறப்பம்சம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல மார்க்கீ பிரீமியர் ஷோவும் உண்டு என்று நிறுவனம் கூறியுள்ளது. BookMyShow Stream அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் இந்த தளத்தில் பிரத்தியேகமான 22,000 மணிநேர உள்ளடக்கத்தை நிறுவனம் கொண்டுள்ளது.
வார்னர் பிரதர்ஸ், சோனி பிக்சர்ஸ், யுனிவர்சல் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் புக் மைஷோ கூட்டு சேர்ந்துள்ளது, மேலும் அவர்களின் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பலவற்றை அதன் மேடையில் வழங்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களான ஷெமரூ , வியாகாம் 18 , ராஜ்ஸ்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் பலவற்றையும் புக் மைஷோவுடன் இணைத்து அதன் உள்ளடக்கத்தை அதன் மேடையில் வழங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக