Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

சாரே கொல மாஸ்: Hi என ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்- சொந்த ஊர்லயே வேலை., அனுபவத்துக்கு ஏற்ப நல்ல சம்பளம்!

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனா தாக்கம் உலக நாடுகளை ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். உச்சத்தில் இருந்தவர்கள் கூட திடீரென வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது. ஏணைய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு அறிவித்தது. ஊரடங்கு நேரத்தில் பலரும் தங்களது புலம்பெயர்ந்த ஊர்களில் இருந்து காலிசெய்து சொந்த ஊருக்கு திரும்பினர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாத நிலையில் மீண்டும் வேலையை தேட தொடங்கியுள்ளனர்.

ஹாய் என வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ்

புலம்பெயர்ந்த வேறு ஊருக்கு சென்று மீண்டும் குடும்பத்தோடு குடியேறுவதற்கு பதிலாக சொந்த ஊரிலேயே தங்களது அனுபவத்திற்கு ஏற்ப வேலை இருக்கிறதா என பலர் தேடத் தொடங்கி வருகின்றனர். இதையடுத்து ஹாய் என வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினால் சொந்த ஊரிலேயே வேலையை இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த மாநிலங்களிலேயே வேலை

தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தொழிலாளர்கள் அவர்களது சொந்த இடங்களிலேயே எஸ்எம்எஸ் மூலம் பயன்பெறும் வகையில் SAKSHAM என்ற போர்ட்டலை அறிமுகம் செய்துள்ளது. இதில் வாட்ஸ்அப் மூலம் ஹாய் என் டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் சொந்த மாநிலங்களிலேயே தங்களது திறமைக்கேற்ற வேலை இருக்கிறதா என கண்டறியலாம்.

உள்ளூர்களில் இருக்கும் பணிகள்

தகவல் தொழில்நுட்பத்துறை டிஃபாக்(TIFAC)-ன் செயல் இயக்கனர் பிரதீப் ஸ்ரீவ்ஸதாவா சாக்ஷாம்(SAKSHAM) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளார். வாட்ஸ்அப் மூலமாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இணைக்க உதவும் எனவும் வாட்ஸ்அப் மூலமாக சொந்த இடங்களில் இருக்கும் வேலைகளை அறிய உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போர்டல் உருவாக்கம்

இந்த போர்டல் இந்தியா முழுவதும் உள்ள எம்எஸ்எம்இ-களின் புவியியல் வரைபடத்தை உள்ளடக்கி உள்ளது. அவர்களின் திறன்களுக்கு ஏற்ப அவர்களது பிராந்தியங்களிலேயே வேலைகள் கிடைக்கும் வகையில் இந்த போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான வாட்ஸ்அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

7208635370 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்

7208635370 என்ற எண்ணுக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பும் போது அந்த நபரின் பணி அனுபம் பற்றிய தகவல்கள் கேள்விகளாக கேட்கப்படும். அதை வழங்க வேண்டும். பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வேலை வழங்குநர்களிடம் இணைக்கப்படும்.

இலவச தொலைபேசி எண்

தற்போதுவரை, சாட்போட் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது. அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் வகையில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் 022-67380800 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர் கொள்வதன் மூலம் இந்த சேவையை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக