Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 பிப்ரவரி, 2021

சியோமி ஸ்மார்ட் கிளாஸ்: ஸ்மார்ட்போன்கள் ஓரங்கட்டப்படும் "அந்த" நாள் வந்துவிட்டது?

 


சியோமி நிறுவனத்தின் புதிய காப்புரிமையானது, இந்நிறுவனம் எதிர்காலத்தில் ஸ்மார்ட் கிளாஸ்களை தயாரிக்கலாம் என்றும், அது மருத்துவம் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் கூறுகிறது.சியோமி நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய காப்புரிமையை (Patent) தாக்கல் செய்துள்ளது, அந்த பேடண்ட் எதிர்காலத்தில் இந்நிறுவனம் தனது சொந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை தயாரிக்கும் என்று தெரிவிக்கிறது.

இந்த புதிய கண்ணாடிகள் வழக்கமான ஸ்மார்ட் கிளாஸ் அம்சங்களைத் தவிர சில புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் 4டி டிடெக்ஷன் மற்றும் Therapeutic signal emitter ஆகியவைகளும் அடங்கும்.


Phototherapy என்றால் என்ன?

போட்டோதெரபி (ஒளிக்கதிர் சிகிச்சை) என்பது ஒரு வகை மருத்துவ சிகிச்சையாகும், இது சில மருத்துவ "நிலைமைகளுக்காக" சிகிச்சையளிக்க ஒளிரும் விளக்குகள் அல்லது ஹாலஜன் விளக்குகள், சூரிய ஒளி மற்றும் ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) போன்ற ஒளியின் பிற மூலங்களை வெளிப்படுத்தும்.

ஐ.டி ஹோம் (IT Home) வழியாக வெளியான புதிய அறிக்கையின்படி, சியோமி ஸ்மார்ட் கிளாஸின் புதிய Therapeutic signal emitter அம்சமானது ஒளிக்கதிர் சிகிச்சைக்கான திறன் கொண்டதாக இருக்கும்.

அதாவது இந்த அம்சம் மூளை சார்ந்த நோய்களுக்கு "சிகிச்சையளிக்க" சியோமி ஸ்மார்ட் கண்ணாடிகளை அனுமதிக்கும். உடன் மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மன நிலைகளுக்கும் மற்றும் கண் சோர்விற்கும் கூட "சிகிச்சையளிக்கும்"!

இதற்காக வெளிப்படும் ஒளி சமிக்ஞைகளில் ultraviolet, infrared, laser மற்றும் visible light signals இருக்கலாம் என்று வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் கண்ணாடிகள் அவற்றின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக விஷூவல் சிக்னல்களுடன் ஒரே நேரத்தில் சவுண்ட் சிக்னல்களை கடத்தும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை தவிர்த்து, வரவிருக்கும் சியோமி ஸ்மார்ட் கண்ணாடிகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இப்போது கிடைக்கவில்லை.

பெரும்பாலான காப்புரிமைகளைப் போலவே, இந்த புதிய காப்புரிமையும் நிச்சயமாக சியோமி என்கிற பிராண்டிலிருந்து வரும் ஒரு புதிய தயாரிப்பாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை நினைவில் கொள்க.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கேஜெட்டுகள் உட்பட பல காப்புரிமைகளும் இன்னும் இறுதி தயாரிப்பாக உருமாறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சியோமியின் ஸ்மார்ட் கிளாஸஸ் யோசனை நிஜமாகும் பட்சத்தில் அது ஆச்சரியமளிக்கும் ஒரு தயாரிப்பாக இருக்கும் எனபதில் சந்தேகம் வேண்டாம்.



அதே சமயம் ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்கும் முதல் பிராண்ட் சியோமி அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற "முதல் தயாரிப்புகளை" தயாரிப்பதற்கான பாதையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பேஸ்புக் கூட ஒரு ஜோடி ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்குகிறது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் ஒரு நாள் ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மையாகும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக