
சாம்சங் நிறுவனம் இன்று அதன் புதிய சாம்சங் லெவல் U2 வயர்லெஸ் ஹெட்போன்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாம்சங் லெவல் U2 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் நம்ப முடியாத மலிவு விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? இதை எப்போ? எப்படி? எங்கே? வாங்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
விலை என்ன?
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் லெவல் U2 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் தற்பொழுது வெறும் ரூ.1,999 என்ற மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தரமான புதிய வயர்லெஸ் ஹெட்போன்ஸ் பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இப்போது விற்பனைக்குக் கிடைக்கிறது. இவை இப்போது பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இந்திய இணையத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
டிசைன் மற்றும் வடிவமைப்பு
இந்த புதிய சாம்சங் லெவல் U2 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் எர்கோனாமிக் டிசைன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கச்சிதமான பொருத்தத்திற்காக எர்கோனாமிக் இயர் வடிவமைப்பையும் இதன் இயர்பட்ஸ்கள் கொண்டுள்ளது. இதனால் நீண்ட நேரத்திற்கு எந்தவித இன்னல்களும் இல்லாமல் இதைப் பயன்படுத்தலாம். இந்த புதிய வயர்லெஸ் ஹெட்போன்ஸ் IPX2 வாட்டர் ப்ரூஃப் சான்றிதழுடன் வருகிறது.
500 மணிநேர ஸ்டான்பை நேரம்
இந்த சாதனம் SBC, AAC மற்றும் ஸ்கேலபில் கோடெக் (scalable codec) அம்சங்களை ஆதரிக்கிறது. சாம்சங் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த சாம்சங் லெவல் U2 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் 500 மணிநேர ஸ்டான்பை நேரம், 18 மணிநேர மியூசிக் பிளேபேக் நேரம் மற்றும் 13 மணிநேர வாய்ஸ் கால் அழைப்பு நேரம் ஆகியவற்றை ஒரே சார்ஜில் ஆதரிக்கிறது. சார்ஜிங்கிற்காக USB டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பான ஆடியோ அனுபம்
சாம்சங் லெவல் U2 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் ப்ளூடூத் 5.0 இணைப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் லெவல் U2 வயர்லெஸ் ஹெட்போன்ஸில் 12mm ஸ்பீக்கர் யூனிட் மற்றும் 2 மைக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான ஆடியோ அனுபவத்திற்காக ஸ்கேலபில் கோடெக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் ஒட்டுமொத்த எடை வெறும் 41.5 கிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக