
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிரான ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு, இந்தியப் பயனர்கள் தங்கள் தனியுரிமையை அதிகம் இழப்பார்கள் என்று தெரிகிறது. காரணம், சமீபத்தில் இந்திய அரசு சமூக ஊடக பயன்பாடுகளின் வழியில் கற்பழிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தும் குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது.
'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' அம்சத்தை கைவிட வேண்டுமா?
இது, தவறான செய்திகளை உருவாக்கிப் பரப்பும் 'தோற்றுவிப்பாளர் அல்லது ஆர்ஜினேட்டரை' (Originator) கண்டுபிடிக்க இந்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக பயன்பாடுகளைக் கட்டாயப்படுத்தியுள்ளது. இதைச் செய்ய, சமூக ஊடக பயன்பாடுகள் அவற்றின் தளங்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சமான 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' அம்சத்தைக் கட்டாயம் கைவிட வேண்டும். இது பயனரின் பிரைவசியை இப்போது வெளிப்படையாக்கிவிடும் என்பதே சிக்கல்.
குடிமக்களின் சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கு ஆபத்து
ET டெலிகாமின் ஒரு அறிக்கையின்படி, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அதன் குடிமக்களின் சுதந்திரத்தையும் தனியுரிமையையும் தீவிரமாக குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று விமர்சகர்கள் கருது தெரிவித்துள்ளனர். அரசாங்கம் மக்களின் சாட் உள்ளடக்கத்தைத் தேடவில்லை, ஆனால் போலி செய்திகளின் 'தோற்றுவிப்பாளரை' மட்டுமே அடையாளம் காண ஆர்வம் காட்டுகிறது என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
போலி செய்திகள் தோற்றுவிப்பவரை அடையாளம் காண அரசாங்கம் ஆர்வம்
குறிப்பாக, ஐந்தாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய சாத்தியமான குற்றங்களுக்கு உட்பட்ட செய்திகள் மீது தான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என்றும், விதிகளின் கீழ், செய்தி நாட்டுக்கு வெளியிலிருந்து தோன்றியிருந்தால், இந்தியாவில் முதலில் மற்றவர்களுடன் பகிர்ந்த நபர் 'தோற்றுவிப்பவர்' என்ற பிரிவில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்தை இந்தியர்கள் இழக்க நேரிடும்
போலி அல்லது ஆபத்தான செய்திகளின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கு, சமூக ஊடக தளங்கள் இந்தியப் பயனர்களுக்கான 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' தொழில்நுட்பத்தை இழக்க நேரிடும். இந்த விதியை இயக்குவது இந்தியப் பயனர்களின் தனியுரிமையைப் பெரிதும் பாதிக்கும் என்று இணையச் சுதந்திர அறக்கட்டளையின் (ஐஎஃப்எஃப்) நிர்வாக இயக்குனர் அபர் குப்தா தெரிவித்துள்ளார்.
இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு
இந்த விதி இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், குற்றங்களின் நோக்கத்தை அதிகரிக்கும் மற்றும் பயனர்களின் தனியுரிமையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் என்று அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு விதியைச் செயல்படுத்த, மெசேஜிங் பயன்பாடுகள் அவற்றின் இயக்க மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.
வாட்ஸ்அப் 'இதை' முன்னரே மறுத்துவிட்டது
வாட்ஸ்அப் நிறுவனம் இதற்கு முன்னரே அதன் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்தில் சமரசம் செய்து, செய்திகளின் தோற்றம் பற்றிய தகவல்களுடன் அரசாங்கத்திற்குச் சேவை செய்ய மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலுக்கு இந்தியப் பயனர்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் மற்றும் சமூக ஊடக பயன்பாடுகள் என்ன முடிவு எடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக