அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் மட்டும் சுமார் 1.3 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை நீக்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 பரவல் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 12 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை அகற்றி இருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சமூகவலைதள பயன்பாடான பேஸ்புக்
சமூகவலைதளங்கள் பயன்பாடு மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இதில் பிரதானமாக இருப்பது வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகும். சமூகவலைதளங்களில் போலி தகவல்கள், பொய் பரப்புரை செய்பவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க நிறுவனங்களிடம் தொடர்ந்து அந்தந்த நாட்டில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. நிறுவனம் போலி கணக்குகள், தகவல்களை கண்டறிவதில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
பேஸ்புக் நிறுவனம் மீது வழக்கு
தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் இந்த காலக்கட்டத்தில் நாமும் அதற்கு ஏற்றவாறு நம்மை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றாலும் நாம் அறியப்படும் தகவலின் உண்மைத் தன்மை என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம். சமீபத்தில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்க தவறியதற்கு ரஷ்ய அதிகாரிகள் சமூகவலைதளங்கள் மீது வழக்கு கொடுத்தனர்.
அதிகரிக்கும் பயனர்கள் எண்ணிக்கை
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேஸ்புக் நிறுவன பயன்பாட்டை உலக அளவில் பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை அதிகம். இந்த நிறுவனம் சமூகவலைதளத்தில் பிரதானமாக இருக்க போட்டி நிறுவனங்களை கையகப்படுத்தும் தொழில்விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு மற்றும் 48 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்தது.
1.3 பில்லியன் கணக்குகள் நீக்கம்
இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பரம் வரையிலான காலக்கட்டங்களில் 1.3 பில்லியன் அதாவது 130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாகவும் தவறான தகவல்களை கையாளுவதில் 35,000-த்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கோவிட்-19 குறித்த 12 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் மற்றும் உலக சுகாதார வல்லுநர்கள் தவறான தகவல் என குறிப்பிட்ட கொடிய தடுப்பூசிகள் குறித்த தகவல்களையும் அகற்றியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின்போது அதன் தாக்கும் மற்றும் தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் தவறான தகவல்கள் அதிகரித்தன.
தவறாக பரப்பப்படும் தகவல்களை குறைக்கும் முயற்சி
தவறாக பரப்பப்படும் தகவல்களை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான போலி கணக்குகளை நீக்கி வருவதாகவும் பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட மொழிக்களில் செயல்பட்டு வரும் பேஸ்புக்கின் ஒவ்வொரு கணக்கின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ள முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நடவடிக்கை
மோசடி குறித்தும், நம்பகமற்ற ஸ்பேம் கணக்குகளுக்கு எதிராக தங்கள் கொள்கையை செயல்படுத்தவும் உதவ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருவதாக நிறுவனம் தெரிவித்தது. பேஸ்பு ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற போலி கணக்குகளை கண்டறிந்து நீக்கு வருகிறது. சமூகவலைதள பாதுகாப்பு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலி கணக்குகள், தகவல்களை கண்டறியவும் நீக்கவும் நிறுவனம் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக