ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்தைப் புகார் அளிக்க இதுவரை பல தொடர்பு எண்களை IRCTC பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது உங்களின் அனைத்து புகார்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்யும் விதத்தில் புதிய தொடர்பு எண்ணை ரயில்வே நிர்வாகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த ஒரு தொடர்பு எண் மட்டும் இனி உங்களின் ரயில் பயணத்தின் போது இருந்தால் போதும்.
இனி 'இந்த' உதவி எண்ணை டயல் செய்தால் போதும்
ரயில் பயணிகள் பயணத்தின்போது தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் இனி பல தொலைப்பேசி எண்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இனி உங்களின் அனைத்து தேவைகளுக்கும், புகார்களுக்கு ‘139' என்ற இந்த ஒற்றை உதவி எண்ணை டயல் செய்தால் போதும். இதில் அனைத்து வகையான புகார்களுக்கு தனித்தனியே பிரிவு உள்ளது.
12 இந்திய மொழிகளில் உதவி
இதன்மூலம் ஒருமுறை 139 டயல் செய்து, உடனுக்குடன் உங்களின் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும், ரயில் தொடர்பான தேவையான தகவலையும் நீங்கள் பெற முடியும். இனி இந்த எண்ணைப் பயணிகள் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வது என்பது மிகவும் எளிமையானது. இந்த சேவை இப்போது 12 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இதன் மூலம் பயணிகள் ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் பதிவு செய்யப்பட்ட குரல்வழி சேவையைப் பயன்படுத்தலாம்.
நேரடியாகக் கால் சென்டர் அலுவலருடன் தொடர்பு கொள்ள
பதிவு செய்யப்பட்ட குரல் வழி சேவை வேண்டாம் என்றால் நீங்கள் நேரடியாகக் கால் சென்டர் அலுவலருடன் தொடர்பு கொள்ளலாம். இதன் நீங்கள் 139 டயல் செய்த பின்னர் உங்கள் போனில் இருந்து * என்ற குறியீட்டை ஒருமுறை பிரெஸ் செய்ய வேண்டும். இந்த தொலைப்பேசி உதவி எண்ணை அழைக்க நீங்கள் ஸ்மார்ட்போன் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, இது அனைத்து வகையான போன்களிலும் பயன்படுத்தலாம்.
139 தொலைப்பேசி உதவி எண்
139 தொலைப்பேசி உதவி எண்ணை நீங்கள் டயல் செய்ததும், எந்தெந்த சேவைக்கு எந்தெந்த எண்களை நீங்கள் அழுத்தி உதவியைப் பெறலாம் என்ற விவரத்தையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
எண் 1: பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்கு இந்த எண்ணை அழுத்தினால், கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பு கிடைக்கும்.
எண் 2: ரயில் பயணத்தின் விசாரணை, பி.என்.ஆர். நிலை, ரயில் வருகை, ரயில் புறப்படும் நேரம், டிக்கெட் கட்டணம், டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் ரத்து, வேக்கப் அலாரம், உணவு, சக்கர நாற்காலி முன்பதிவு போன்றவற்றிற்கு நீங்கள் எண் 2-ஐ அழுத்தலாம்.
எண் 4: பொது புகார்கள்.
எண் 5: லஞ்சம் தொடர்பான புகார்கள்.
எண் 6: பார்சல் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணைகள்.
எண் 7: ஐ.ஆர்.சி.டி.சி.யால் இயக்கப்படும் ரயில்கள் தொடர்பான விசாரணைகள்.
எண் 9: அளித்த புகாரின் நிலை குறித்த தகவல் அறிய.
குறியீடு * : கால் சென்டர் அலுவலருடன் நேரடியாகப் பேச.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக