ஆசஸ் நிறுவனம் இன்று இந்தியா மற்றும் பிற சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தைகளில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஆசஸ் ROG போன் 5 கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த சில வாரங்களில் மிகவும் பிரமிப்பாகப் பேசப்பட்டு வந்தது, காரணம் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 18 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்ஸ் மற்றும் 6,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இடம்பெறுகிறது.
ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் விலை
இந்திய விலையைப் பொறுத்தவரை ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போன் ஃபாண்டம் பிளாக் மற்றும் ஸ்டோர்ம் வைட் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டின் விலை ரூ .49999 ஆகும். அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 57,999 என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆசஸ் ROG போன் 5 விலை
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 16 ஜிபி ரேம் மற்றும் 18 ஜிபி ரேம் மாடலும் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை விபரத்தை இப்போது பார்க்கலாம், ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் பாண்டம் பிளாக் நிறத்தில் ரூ. 69,999 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இதுவே இந்த விலை என்றால் ஹை-வேரியண்ட்டின் விலையை சற்று யோசித்து பாருங்கள்.
18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு வேரியண்ட்
இந்த அறிமுகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் ஹை-வேரியண்ட் மாடல் தான். காரணம், இது 18 ஜிபி ரேம் உடன் வெளிவருகிறது. சரி, இப்போது இந்த புதிய ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனி ன் 18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடலின் விலையை பார்க்கலாம். இந்த 18ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் இந்தியாவில் ஸ்டோர்ம் வைட் நிறத்தில் ரூ. 79,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 15 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
Asus ROG Phone 5 சிறப்பம்சம்
ஆசஸ் ROG போன் 5 சாதனம் 1080 x 2448 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.78' இன்ச் முழு எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது திரை, 20.4: 9, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 300 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதம், 24.3 எம்எஸ் டச் லேட்டன்சி, இந்த தொலைபேசி ஒரு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 SoC செயலி மற்றும் அட்ரினோ 660, எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பகத்தால் இயக்கப்படுகிறது. கூடுதலாக, வெப்பநிலையைக் குறைக்க ஒரு 3D நீராவி அறை கிடைக்கும்.
டிஸ்பிளே
ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போன், 6.78' இன்ச் கொண்ட 1080x2400 பிக்சல்கள் தீர்மானம் உடைய முழு எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 20: 9 என்ற விகித டிஸ்பிளே விகிதம் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் எச்டிஆர் 10 + ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் மற்றும் 18 ஜிபி ரேம் என நான்கு வெவ்வேறு மாடல்களில் வருகிறது.
6000mAh பேட்டரி
இது 1.80 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன், மற்ற ரேம் வகைகளும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போன் சாதனம் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி என்பது இதில் 2x 3000mAh பேட்டரிகள் மூலம் தடையில்லாத சக்தி வழங்கப்படுகிறது.
ஃபாஸ்ட் சார்ஜிங்
65W ஹைபர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 30 நிமிடங்களில் 70% சார்ஜ் செய்கிறது. அதேபோல், 52 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்து முடிக்கிறது. இது இன்-பில்ட் கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. இது ROG UI உடன் Android 11 இயக்க முறைமையில் இயக்குகிறது.
கேமரா
புதிய ஆசஸ் ROG போன் 5 கேமிங் ஸ்மார்ட்போன் சாதனம் மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கேமராவாக 13 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கேமராவாக 5 மெகாபிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது. செல்பி அனுபவத்திற்காக முன்பக்கத்தில், 24 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக