ஒப்போ நிறுவனம் இந்தியாவில் 'ஒப்போ பேண்ட் ஸ்டைல்' என்ற புதிய பிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அணியக்கூடிய சாதன வகையில், பயனர்களின் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட பல அம்சங்களுடன் வருகிறது. இந்த புதிய ஃபிட்னெஸ் பேண்ட் ஆக்ஸிஜன் கண்காணிப்பு (SpO2) அம்சத்துடன் நிகழ் நேர இதயத் துடிப்பு கண்காணிப்புடன் வருகிறது.
புதிய ஒப்போ பேண்ட் ஸ்டைல்
இந்த சாதனம் ஒப்போ எஃப் 19 புரோ + 5 ஜி மற்றும் ஒப்போ எஃப் 19 புரோ ஸ்மார்ட்போன்களுடன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ பேண்ட் ஸ்டைல், அமேசான் இந்தியா வழியாக வரும் மார்ச் 23ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய சாதனம் இந்தியச் சந்தையில் ரூ.2,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்ப கால விற்பனையில் வெறும் ரூ.2,799 என்று விலையில் கிடைக்கிறது.
நிகழ் நேர இதய துடிப்பு கண்காணிப்பு
புதிய ஒப்போ பேண்ட் ஸ்டைல் 1.1 இன்ச் கலர் AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது, இது Mi பேண்ட் 5 போன்றது. இது பயனர்களின் இரத்த செறிவு அளவை (SpO2) தொடர்ந்து கண்காணிக்கும், மேலும் குறிப்பாக, 8 மணிநேர தூக்க காலத்தில் பேண்ட் 28,800 முறை SpO2 அளவை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ பேண்ட் ஸ்டைல் நிகழ் நேர இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் தூக்கக் கண்காணிப்புடன் வருகிறது.
12 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோடு
பயனர்கள் ஏதேனும் தூக்கச் சிக்கல்களை எதிர்கொள்கிறார்களா என்பதைக் கண்டறியும் வகையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒப்போ கூறியுள்ளது. இந்த புதிய பிட்னஸ் பேண்ட் 12 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோடு உடன் வெளிவந்துள்ளது. பயனர்களின் அனைத்து முன்னேற்றங்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஹெய்டாப் ஹெல்த் (HeyTap Health) பயன்பாட்டில் சேமிக்கப்படும்.
நோட்டிபிகேஷன் & கண்ட்ரோல்
இது 5ATM சான்றிதழ் பெற்ற வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வெளிவருகிறது. Oppo Band Style கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் நோட்டிபிகேஷன், கேமரா கண்ட்ரோல், வெதர் ரிப்போர்ட், மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் போன்ற பல அம்சங்களுடன் ப்ளூடூத் வேர்சின் 5.0 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு சாதனங்களுடன் இணக்கமாகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக