சாதாரண மொபைல் போன் அல்லது பியூச்சர் போன் சாதனத்திலிருந்து மேம்படுத்த விரும்பும் இந்தியர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் அதன் முதன்மை 4 ஜி ஸ்மார்ட்போன்களைப் வழங்க ஐடெல் (Itel) நிறுவனம் பஜாஜ் பின்சர்வ் உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதன் மூலம் வெறும் ரூ.299 என்ற குறைந்த செயலாக்கச் செலவில் புதிய Itel 4ஜி ஸ்மார்ட்போன்களை வழங்க நிறுவனம் முன்வந்துள்ளது.
4 ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க இது தான் சரியான நேரம்
இந்தியாவில் 4 ஜி ஊடுருவல் தற்போது சந்தைப் பங்கில் 55% மட்டுமே இருக்கிறது. அதாவது, 4 ஜி சாதனங்கள் அல்லது 4 ஜி இணைப்புகளை அழைப்பு மற்றும் தரவுகளுக்குப் பயன்படுத்தாத பயனர்கள் நிறைய உள்ளனர். இதனால் பஜாஜ் ஃபின்சர்வ் உடன் ஐடெல் இணைந்து தனது 4 ஜி ஸ்மார்ட்போன்களை குறைந்த செயலாக்கச் செலவில் ரூ .299க்கு வழங்குகிறது. இந்த சலுகையைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ் உடன் ஐடெல் ஸ்மார்ட்போன் சலுகை
ஐடெல் தனது பிளாக்ஷிப் சாதனங்களான விஷன் 1 (3 ஜிபி), விஷன் 1 ப்ரோ, ஐடெல் ஏ 25 ப்ரோ மற்றும் ஐடெல் ஏ 48 ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்த திட்டத்தின் கீழ் வழங்குகிறது. இவை அனைத்தும் 4 ஜி எல்டிஇ இணைப்பை ஆதரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. நவநாகரீக அம்சங்களைக் கொண்ட இந்த சாதனங்களை வாடிக்கையாளர்கள் ஜீரோ டவுன் பேமெண்ட் மற்றும் நோ-காஸ்ட் ஈ.எம்.ஐ விருப்பத்தில் பெறலாம்
26 மாநிலங்களில் 1200+ நகரங்களில் இந்த சலுகை
ஐட்டலில் இருந்து வரும் ஸ்மார்ட்போன்களை ஒரு சிறிய செயலாக்கக் கட்டணமாக ரூ. 299க்கு வாங்கலாம், அதைத் தொடர்ந்து நோ-காஸ்ட் ஈ.எம்.ஐ நீங்கள் செலுத்தலாம். இந்த சலுகை இந்தியாவில் 1200+ நகரங்கள் மற்றும் 26 வெவ்வேறு மாநிலங்களில் வாடிக்கையாளர்களுக்கு நேரலையில் உள்ளது. இந்த சலுகையைப் பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ நெட்வொர்க் கார்டை வைத்திருக்க வேண்டும்.
'டபுள் ஜீரோ' சலுகை திட்டம்
முதலாவதாக, 'டபுள் ஜீரோ' திட்டத்தின் கீழ், ஐடெல் ஏ 25 ப்ரோ, ஐடெல் ஏ 48, ஐடெல் விஷன் 1 (3 ஜிபி), மற்றும் ஐடெல் விஷன் 1 ப்ரோ ஆகியவற்றைச் செயலாக்கக் கட்டணமாக ரூ. 299 செலுத்தி நீங்கள் பெறலாம். அதைத் தொடர்ந்து மாதம் ரூ. 1,275, ரூ. 1,525, ரூ. 1,750, மற்றும் ரூ. 1,725 என்று முறையே நீங்கள் EMI கட்டணமாகச் செலுத்திட வேண்டும்.
'நோ-காஸ்ட் இ.எம்.ஐ' திட்டம்
அதேசமயம், 'நோ-காஸ்ட் இ.எம்.ஐ' திட்டத்தின் கீழ், ஐடெல் ஏ 48, ஐடெல் விஷன் 1 ப்ரோ, மற்றும் ஐடெல் விஷன் 1 (3 ஜிபி) ஆகியவற்றைச் செயலாக்கக் கட்டணமாக ரூ .299 செலுத்தி நீங்கள் பெறலாம். ஆனால், முறையே ரூ. 1,220, ரூ. 1,380 மற்றும் ரூ. 1,400 என்ற கட்டணமில்லாத இ.எம்.ஐ நீங்கள் அதற்குப் பின்னர் தொடர்ந்து செலுத்தி வர வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டாக ஐடெல்
இந்த சலுகையை அறிவித்த பின்னர், ரூ .7,000க்கு கீழ் உள்ள 4ஜி ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு இதுபோன்ற சலுகையை வழங்கிய முதல் நிறுவனமாக இந்தியாவில் ஐடலின் உள்ளது என்று நிறுவனத்தின் சமீபத்திய வெளியீட்டுத் தகவல் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து, ரூ .7,000 பிரிவின் கீழ் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டாக ஐடெல் கருதப்படுகிறது என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்க ரெடியா?
குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த சலுகை உண்மையில் வரப்பிரசாதம் தான். காரணம், வெறும் ரூ.299 மட்டும் முன்பணமாகச் செலுத்தி நீங்கள் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக