போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் பிராசஸர், 48எம்பி கேமரா, 5160 எம்ஏஎச் பேட்டரி என தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்.
ரூ.1000 வரை தள்ளுபடி
மேலும் இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டு அல்லது இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்போது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின்சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1080 x 2400 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சஙகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 7 என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் உடன் அட்ரினோ 640 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு அருமையாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி Sony IMX582 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்பு வசதிக்கு என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
5160 எம்ஏஎச் பேட்டரி
புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர் ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கோல்டன் ப்ரான்ஸ், கிராஃபைட் பிளாக் மற்றும் ஸ்டீல் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடல்.
போக்கோ எக்ஸ்3 ப்ரோ விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக