இந்திய ஸ்மார்ட்போன் சந்தை கடந்த சில ஆண்டுகளில் மகத்தான வளர்ச்சியை அடைந்துள்ளது. பல பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகள் சலுகை விலையில் கிடைப்பதால் பயனர்கள் தேர்வு செய்வதற்கு ஏராளமான விருப்பங்கள் உள்ளன. இருப்பினும் மக்களுக்கு பிரமிக்க வைக்கும் ஸ்மார்ட்போன்களை உருவாக்குதில் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு பிராண்ட் எல்ஜி., தான்.
எல்ஜி நிறுவனம் சமீபத்தில் எல்ஜி டபிள்யூ தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் எல்ஜி டபிள்யூ 41, டபிள்யூ 41 பிளஸ் மற்றும் டபிள்யூ 41 ப்ரோ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது. இது நவீன அம்சங்களோடு பயனர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது.
இந்த தொடர் பல பயனுள்ள அம்சங்களை கொண்டு வருகிறது. இந்த சாதனங்கள் பட்ஜெட் பிரிவில் தனித்துவ அம்சங்களை கொண்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. எல்ஜி டபிள்யூ சீரிஸ் பொழுதுபோக்கு தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தோடு நல்ல கேமரா செயல்திறனையும் வழங்குகிறது.
எல்ஜி டபிள்யூ 41 இந்தியாவில் ரூ.15,000 விலை பிரிவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போகும். மேலும் 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு இதில் இருப்பது சிறப்பம்சம் ஆகும்.
சிறந்த போட்டோகிராஃபி அம்சத்திற்கு 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு
எல்ஜி டபிள்யூ 41 தொடர் ரூ.15,000 விலை
பிரிவில் கிடைக்கும் 48 எம்பி முதன்மை கேமராவுடன் உயர்மட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
பிரதான சென்சார் உங்கள் புகைப்படங்களை அதிக கோண ஷாட்ஸ்டோவைப் பெறுவதற்கு 8 எம்பி கேமராவுடன்
இணைகிறது. க்ளோஸ்-அப் மேக்ரோ ஷாட்களுக்கு எல்ஜி டபிள்யூ 41 5 எம்பி மேக்ரோ சென்சாரை
கொண்டுள்ளது. பொக்கே தரத்திற்கு இதில் 2 எம்பி கூடுதல் சென்சார் இருக்கிறது. திறன்வாய்ந்த
கேமரா ஹார்ட்வேர் மூலம் எல்ஜி டபிள்யூ 41 ஒப்பிடமுடியாத இமேஜிங் அனுபவத்தை வழங்குகிறது.
மிருதுவான மற்றும் தெளிவான படங்களை இதில் எதிர்பார்க்கலாம், காரணம் ஏஐ இயக்கப்பட்ட
கேமரா அற்புதமான ஒளி மற்றும் காட்சிகளின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்கிறது. பின்புற
கேமரா மட்டுமின்றி செல்பி ஸ்னாப்பரும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. 8 எம்பி செல்பி
கேமரா சமூகவலைதள பதவேற்றங்களை திறன் வாய்ந்ததாக மாற்றுகிறது. போர்ட்டபிள் கேமிங் சாதனம்
கேமிங் சென்ட்ரிக் மீடியா டெக் ஹீலியோ ஜி35 செயலி எல்ஜி டபிள்யூ 41-ல் பொருத்தப்பட்டிருப்பது பிற சாதனங்களிடம் இருந்த இதை தனித்து நிற்க செய்கிறது. 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் செயலி உயர்நிலை கிராபிக்ஸ்களை எளிதாக வழங்க IMG PowerVR GE8320 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட்டானது ஹைப்பர்எங்கைன் தொழில்நுட்ப சலுகைகளை பயன்படுத்தி எவ்வித பின்னடைவும் இன்றி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கிறது. 4ஜிபி ரேம், எல்ஜி டபிள்யூ 41 மல்டி டாஸ்கிங் அனுபவத்தை வழங்குகிறது. எல்ஜி டபிள்யூ 41 கேம்களில் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. அதோடு பிற பொது அம்சங்களையும் சிறப்பாக மேற்கொள்ள இது உதவுகிறது. 64ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் கூடுதல் மெமரி தேவை இருக்கும் பட்சத்தில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் உடன் வருகிறது. எல்ஜி டபிள்யூ 41 ப்ளஸ் 4ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு, எல்ஜி டபிள்யூ 41 ப்ரோ 6ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு உடன் வருகிறது. இதன் அதிக ரேம் அம்சம் கேம் உட்பட பல பயன்பாடுகளை திறன்பட மேற்கொள்ள உதவுகிறது.
தேடலை எளிதாக்கும் கூகுள் அசிஸ்டென்ட் அர்ப்பணிப்பு
சிறந்த பயனர் அனுபவத்திற்கு பயனர்களுக்கு
எந்த வகையான அம்சங்கள் தேவை என்பதை எல்ஜி நன்கு புரிந்துள்ளது. இந்த பிராண்ட் புதிய
யோசனைகளை இணைத்து அதன் தயாரிப்புகளுக்கு அத்தகைய அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி
எல்ஜி டபிள்யூ 41 பிரத்யேக கூகுள் அசிஸ்டெண்ட் அமைப்பை கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்.
பயன்பாட்டை உபயோகிக்கும் போது நீங்கள் கூகுள் அசிஸ்டெண்டை தேட வேண்டியதில்லை ஒரு கிளிக்கில்
கூகுள் மூலம் கேள்விகளை கேட்கலாம். அர்ப்பணிப்புடன் கூடிய கூகுள் அசிஸ்டென்ட் விசையை
வாக்கி டாக்கி மூலம் பயன்படுத்தலாம். விரைவான கூகுள் கட்டளைக்கு இந்த பட்டனை அழுத்திப்பிடிப்பதன்
மூலம் பேசியே கூகுள் தேடல்களை அணுகலாம்.
ப்ரீமியம் உணர்வு மற்றும் முறையீட்டு அம்சம்
எல்ஜி டபிள்யூ 41 பட்ஜெட் பிரிவில் ப்ரீமியம்
தோற்ற உணர்வை வழங்குகிறது. புதிதாக வடிவமைக்கப்பட்ட கேமரா தொகுதி பின்புற வடிவமைப்பு
பளபளப்பான தோற்றத்துடன் ப்ரீமியம் முறையீட்டை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச்
எச்டி ப்ளஸ் ஹோல் இன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது நவீன இன் டிஸ்ப்ளே கேமரா கட்அவுட்
பஞ்ச் ஹோல் வடிவமைப்பு தோற்றத்தை வழங்குகிறது. 20:9 விகிதத்துடன் எச்டி ப்ளஸ் தீர்மானம்
720 x 1600 பிக்சல்களை கொண்டுள்ளது. சாதனத்தின் பின்புறத்தில் பாதுகாப்பு அம்சத்திற்கு
கைரேகை சென்சார் வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கண்டிப்பாக பயனர்களை
ஈர்க்கும் காரணம் இது மகிழ்ச்சியான பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
பெரிய பேட்டரி பேக்அப் அம்சம்
எல்ஜி டபிள்யூ 41 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது யூஎஸ்பி டைப்சி போர்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. இதன் ஒப்பிடமுடியாத சார்ஜிங் மூலம் நீண்டகால பேட்டரி பேக்அப் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தேவையின்றி வருகிறது. அதிக பயன்பாட்டு வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம் தடையற்ற கேமிங் மற்றும் உள்ளடக்கத்தை மெகா பேட்டரி மூலம் வழங்குகிறது.
இதர நிஃப்டி அம்சங்கள்
எல்ஜி டபிள்யூ 41 பட்ஜெட் சாதனத்தில் இருக்கும் அடிப்படை தொகுப்புகள் சில ப்ரீமியம் சாதனங்களில் காணமுடியாதவையாக இருக்கிறது. குறிப்பாக இதில் இருக்கும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், எல்ஜி டபிள்யூ 41 பிரத்யேக கார்ட் ஸ்லாட் உடன் வருகிறது. இதன்மூலம் பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்ட்கள், ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்களை பொறுத்தலாம். இந்த அம்சம் சந்தையில் பிற சாதனங்களுடன் மாற்றப்பட்டிருக்கிறது. இது வைஃபை, ப்ளூடூத் இணைப்பு ஆகிய ஆதரவுகளும் உள்ளது.
எல்ஜி டபிள்யூ 41 சாதனத்தை ஏன் வாங்க வேண்டும்?
ஸ்மார்ட்போன் வாங்குவதை கருத்தில் கொள்வதற்கான
முக்கிய காரணம் எல்ஜி டபிள்யூ 41 சாதனத்தில் இன்டர்னல் மற்றும் சிறந்த விலை அம்சத்தில்
வருகிறது. இந்த எல்ஜி டபிள்யூ41 ஸ்மார்ட்போன் ரூ.13,490 விலையிலும், எல்ஜி டபிள்யூ
41 பிளஸ் ரூ.14,490 என்ற விலையிலும், ப்ரோ ரக அம்ச விலை ரூ.15,490 விலையிலும் கிடைக்கிறது.
மிகச் சிறந்த கேமரா வடிவமைப்பு, மிகப்பெரிய பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளத. எல்ஜி 41 ஸ்மார்ட்போன் இந்திய நுகர்வோருக்கு முழுமையான தொகுப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக