
பேஸ்புக் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் ஷார்ட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனான BARSஅப்ளிகேஷனை உருவாக்கி இருப்பதாக தகவல்வெளிவந்துள்ளது.
BARS செயலி
குறிப்பாக BARS செயலியை தற்போது பீட்டா வெர்ஷனாக அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம். மேலும் இந்த BARS செயலி ஆனது கிட்டத்தட்ட டிக் டாக் போலவே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் டிக்டாக் செயலியில் எப்படி ஷார்ட் வீடியோவை பதிவு செய்தீர்களோ அதேபோல் இந்த BARS செயலியிலும் ஷார்ட் வீடியோவை பதிவு செய்ய முடியும்.
டிக்டாக் செயலி
கடந்த ஆண்டு டிக்டாக் செயலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. ஆனாலும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் பல செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இருந்தபோதிலும் டிக்டாக் செயலி கொடுத்த வசதியை மற்ற செயலிகள் கொடுக்கவில்லை. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள BARS ஆனது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் வெளிவந்த தகவலின்படி,ராப்பிங் பாணியில் இந்த BARS செயலியை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ராப்ஸாக மாற்றுவதற்கு முன்பே பதிவுசெய்யப்பட்ட பீட்ஸ்களும் BARS செயலியில் உள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் New Product Experimentation (NPE) R&D அமைப்பு இந்த BARS செயலியை வடிவமைத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த செயலி அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த புதிய செயலி ஆப்பிள் போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பீட்டா வெர்ஷனாக கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகவும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக