ஆமிஹால் தூங்கப்போகும் போது தனது போர்வையில் திடீரென தீப்பிழம்புகள் பரவியதை கவனித்தார். இதனால் அந்த பெண் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த தீவிபத்தில் அவரது கன்னப்பகுதியில் சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டன.
தீப்பிடித்த ஐபோன் சார்ஜர்
ஆமிஹால் தனது போர்வையில் திடீரென ஒளிரும் ஆரஞ்சு தீப்பிழம்பை கவனித்ததாகவும் உடனே அவர் கீழே ஓடி தனது தாயை அழைத்து தீயை அணைக்க முயற்சித்தார் என கூறப்படுகிறது. ஐபோன் சார்ஜர் தீப்பிடித்தது குறித்து ஆப்பிள் விசாரித்து வருவதாக கூறுகிறது.
சார்ஜர் குறித்து பார்க்கையில் இது ஆப்பிள் சார்ஜிங் கேபிள் மற்றும் மற்றொரு பிராண்டின் சார்ஜிங் பிளக் ஆகியவற்றை கொண்டுள்ளது என பர்மிங்காம் மெயில் கூறுகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்ட 17 வயது ஆமிஹால் இதை மறுக்கிறார். சார்ஜர் மலிவானது அல்ல, இது ஆப்பிள் சார்ஜர்தான் எனவும் தயவு செய்து படுக்கைக்கு செல்லும் போது ஒரே இரவில் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வேண்டாம் என தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து தீவிபத்துக்கான காரணம் குறித்து ஆப்பிள் நிறுவனம் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு குறித்த கவனத்தை தீவிரமாக கவனம் செலுத்துகிறது எனவும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது. சார்ஜிங் பாதுகாப்பு தரங்களை மதிப்பாய்வு செய்யும்படி நிறுவனம் ஐபோன் பயனர்களை பரிந்துரைத்தது. அதேபோல் பயனர்கள் தங்களது சார்ஜிங் கருவிகளை தவறாமல் பரிசோதித்து அது சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆப்பிள் அறிவுறுத்துகிறது.
இந்த தீவிபத்து ஏற்பட்ட போது அதிர்ஷ்டவசமாக ஆமிஹால் விழித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. 17 வயதான ஆமிஹால் பர்மிங்காமில் உள்ள கிட்ஸ் கிரீன் நகரில் தனது குடும்பத்தாரோடு தங்கி வருகிறார். இந்த சம்பவம் குறித்தும் அவரது கன்னத்தில் ஏற்பட்ட தீக்காயம் குறித்தும் அவர் பதிவிட்ட டுவிட்டில் தெரியவந்துள்ளது.
பிரச்சனைகள் பெரும்பாலும் மூன்றாம் தரப்பு ஆபரணங்களால்தான் ஏற்படக்கூடும் எனவே ஆப்பிள் பிள்க் தானா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக ஆப்பிள் பிஎல் இடம் தெரிவித்துள்ளது. சார்ஜர் தீப்பிடித்தப்போது அவர் விழித்திருந்தார் இல்லையெனில் விஷயங்கள் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுவான காரணம் என்ன
இதுபோன்ற செய்திகளை கேட்கும்போதெல்லாம் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம். செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால், செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.
அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர்
எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.
குறைந்த விலை பேட்டரி
குறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தடுக்கவும் மேலும் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக