கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு ஏற்ற வாகனமான டாடா ஏஸ், எலக்ட்ரிக் வாகனமாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் எதிர்கால போக்குவரத்தின் முக்கிய அங்கமாக எலக்ட்ரிக் வாகனங்கள் தான் விளங்கவுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
தற்போதைய எரிபொருள் வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மாற்றம் முதலில் பயணிகள் வாகனங்களில் இருந்து தான் துவங்கவுள்ளன என்றாலும், வருங்காலங்களில் கமர்ஷியல் வாகன பிரிவிலும் எலக்ட்ரிக் பயன்பாடு நிச்சயம் கொண்டுவரப்படும்.
அதன் துவக்கமாகவே தற்போது டாடா ஏஸ் வாகனம் ஒன்று எலக்ட்ரிக் வாகனமாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை வாகனம் தொடர்பான வீடியோ ஹெமங் தபதே என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
வழக்கமாக எரிபொருள் என்ஜின் பொருத்தப்படும் இடத்தில், அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் மோட்டாரை பெற்றுவந்துள்ள இந்த டாடா ஏஸ் வாகனம் எந்தவொரு கமர்ஷியல் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட போவதில்லை எனவும், ஆராய்ச்சிக்காகவே இந்த மாடிஃபை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடிஃபை ஏஸ் கமர்ஷியல் வாகனத்தில் 18 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது. புனேவை சேர்ந்த வொர்க் ஷாப் ஒன்றில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு மோட்டார் ஷாஃப்ட்டில் அதிகப்பட்சமாக 165 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.
ஆனால் இந்த டாடா ட்ரக் வாகனத்தில் வழக்கமாக வழங்கப்படும் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக வெறும் 45 என்எம் டார்க் திறனையே வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்படுகிறது. இதனால் இந்த டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தில் அதிகப்பட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் தான் செல்ல முடியும்.
ஆனால் பேட்டரி பொருத்தப்பட்ட இந்த மாடிஃபை ஏஸ் வாகனத்தில் 140kmph வேகத்தில் இயங்க முடியும். இந்த மாடிஃபை எலக்ட்ரிக் வாகனத்தில் டாடா ஏஸின் அதே 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், க்ளட்ச் பெடலின் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.
என்ஜினின் டார்க் திறனை அதிகரிக்க ஓட்டுனர் 3வது அல்லது 4வது கியரில் சென்றாலே போதுமானது. 5வது கியரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிவிரைவு நெடுஞ்சாலை போன்ற சாலைகளில் மட்டுமே பயன்படுத்தலாம்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சிங்கிள்-பேஸ் சாக்கெட்டை பயன்படுத்தி இதன் பேட்டரியை சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். அல்லது விரைவாக சார்ஜ் ஏற்ற விரும்பினால் 3-பேஸ் சாக்கெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என இந்த வாகனத்தை மாடிஃபை செய்த புனே வொர்க் ஷாப் தெரிவித்துள்ளது.
இதனால் விரைவு சார்ஜர் மையங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது எனவும் மேல் உள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏஸ் எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனத்தை ஒரு காலத்தில் யுகே-வில் விற்பனை செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக