Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 24 மார்ச், 2021

வேற லெவலில் உருவாகிறது ட்ரையம்ஃப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்!


வேற லெவலில் உருவாகிறது ட்ரையம்ஃப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்!

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் பிரிமீயம் பைக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் ட்ரையம்ஃப் நிறுவனத்தின் பிரிமீயம் வகை பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், மாசு இல்லாத வாகனங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிய எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் பணிகளில் ட்ரையம்ஃப் ஈடுபட்டுள்ளது.

இதன்படி, TE-1 என்ற திட்டப் பெயரில் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை ட்ரையம்ஃப் உருவாக்கி வருகிறது. இந்த பைக்கின் ஸ்கெட்ச் படங்கள் மற்றும் சில முக்கியத் தகவல்களை ட்ரையம்ஃப் வெளியிட்டுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை ட்ரையம்ஃப் நிறுவனம் வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு எஞ்சினியரிங், டபிள்யூஎம்ஜி, இன்டகிரல் பவர்ட்ரெயின் லிமிடேட் ஆகிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து ட்ரையம்ஃப் உருவாக்கி வருகிறது.

இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலானது இங்கிலாந்து அரசின் மாசு உமிழ்வு இல்லா வாகன உருவாக்கத்திற்கான நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலானது ட்ரையம்ஃப் நிறுவனத்தின் 1200 ஆர்எஸ் பைக் மாடலை அடிப்படையாகக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய எலெக்ட்ரிக் பைக்கின் சேஸீ உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களை ட்ரையம்ஃப் நிறுவனம் உருவாக்கும் பணிகளை செய்து வருகிறது. பேட்டரி டிசைன் மற்றும் கன்ட்ரோல் யூனிட்டுகளை வில்லியம் எஞ்சினியரிங் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த பைக்கிற்கான உயர்திறன் மின் மோட்டாரை இன்டகிரல் பவர்ட்ரெயின் நிறுவனம் தயாரிக்கிறது. இதர முக்கிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை வார்விக் பல்கலைகழகத்தின் டபிள்யூஎம்ஜி பிரிவு ஏற்றுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் பைக் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி மிகுந்த செயல்திறன் மிக்கதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட சோதனைகளில் இதன் பேட்டரி, பிற எலெக்ட்ரிக் பைக் பேட்டரிகளைவிட சிறந்ததாக இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் ட்ரையம்ஃப் பெருமிதம் தெரிவித்துள்ளது.

இந்த பைக்கின் மின் மோட்டார் 180 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், அதே நேரத்தில் மிகவும் அடக்கமான வடிவமைப்பு மற்றும் 10 கிலோ மட்டுமே எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த பைக்கை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் நடத்த ட்ரையம்ஃப் மற்றும் இந்த பைக் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள அதன் கூட்டணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடுத்த ஆண்டு தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக