Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 மார்ச், 2021

விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் - திருவிஜயமங்கை

 

Vijaya Natheswarar Temple : Vijaya Natheswarar Vijaya Natheswarar Temple  Details | Vijaya Natheswarar - Tiruvijayamangai | Tamilnadu Temple |  விஜயநாதேஸ்வரர்

மூலவர் : விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்)
அம்மன்/தாயார் : மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
தீர்த்தம் : அர்ஜுன தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்
தலமரம். வில்வம்
வழிபட்டோர் : அர்ஜுனன்
தேவாரப் பாடல்கள் :- அப்பர், சம்பந்தர்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம். அர்ஜுனனுக்கு விஜயன் என்றும் பெயருள்ளதால், சிவன் "விஜயநாதர்' என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 47 வது தேவாரத்தலம் ஆகும்.


தல வரலாறு:

மகாபாரத போரின்போது பாண்டவர், கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான்.  இவ்வேளையில், வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற அர்ஜுனன் இத்தலத்தில் ஈசனை நோக்கி தவம் செய்தான். இதையறிந்த, துரியோதனர் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். தன்னத் தாக்க வந்த அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான்.நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. பன்றி வடிவில் வந்த அசுரனை, அர்ஜுனன் வீழ்த்தினான். வேடன், தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. அவ்வேளையில், சுயரூபம் காட்டிய சிவன், பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அர்ஜுனன் (விஜயன்) ஈசனை பூஜித்த தலமாதலால் இத்தலம் திருவிஜயமங்கை என்று பெயர் பெற்றது. அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை லிங்கத்தின் மீது காணலாம்.


ஆயுள் விருத்தி வழிபாடு:

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்தைப் போற்றி தேவாரம் பாடியுள்ளனர். திருநாவுக்கரசர், எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இதனால், ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். படித்து முடித்து, முதலில் வேலைக்குச் செல்பவர்கள், தேர்வில் வெற்றி பெற விஜயநாதருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

கோவில் அமைப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுர ஆவுடையார் மீது அருள்பாலிக்கிறார்.அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. கோயிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மண்ணியாற்றின் வடகரையில் கோவில் கிழக்கு நோக்கிப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. இராஜ கோபுரம் கிடையாது. கொடிமரம் இல்லை. மதிற்சுவருடன் கூடிய ஓர் நுழைவு வாயில் உள்ளது .

வாயில் வழியாக உற்றே நுழைந்தவுடன் நேரே ஒரு சிறிய சந்நிதியில் விநாயகர் காட்சி தருகிறார்.வாயிலை நோக்கிய வண்ணம் மூலவர் சந்நிதி உள்ளது.மூலவர் கிழக்கு நோக்கி உள்ளார்.அர்ச்சுணன் அம்பு பட்ட தழும்பும், வரைகோடும், சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல காணப்படுகின்றன. மூலவர் விஜயநாதேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் மங்கைநாயகி தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். மகாமண்டபம் கல்.மண்டமாக காட்சியளிக்கிறது.ஒரு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளன.

பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலைபைரவர், சூரியன், நால்வர் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

வெளிப்பிரகாரம் விசாலமான அமைப்புடன் விளங்குகிறது.கோவிலுக்கு வெளியே அர்ச்சுன தீர்த்தம் அமையப் பெற்றுள்ளன. கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், அனுக்கிரக தெட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். நால்வருக்கும் தனி சந்நிதி உள்ளது.

அம்மை மங்கநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருளாட்சி புரிகிறார். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில், ஒரு கையில் அட்சர மாலையும், மற்றொரு கையில் நீலோத்பவ மலருடன் அருள் பார்வை பொழிகிறாள். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

சிறப்புக்கள் :

இதனால் ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயினில் பீடிக்கப் பட்டோர் குணமாக வேண்டுதலை வேண்டிக் கொண்டு இங்கு வந்து தொழுகிறார்கள்.


செயல்களில் வெற்றி (விஜய்--ஜெயம்) பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜய நாதரை வழிபடுகிறார்கள்.

படித்து முடித்து முதலில் வேலைக்குச் செல்பவர்கள் இங்கு வந்து இறைவன் இறைவிக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொள்கிறார்கள்.

திருவிழா:
திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும்.

போன்:  -

94435 86453, 93443 30834

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு கும்பகோணத்தில் இருந்து திருப்பறம்பியம் சென்று அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சென்றால் கொள்ளிட ஆற்றின் கரையில் உள்ள இத்தலத்தை அடையலாம். மற்றொரு சிவஸ்தலமான திருவைகாவூர் இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

அர்ஜுனன் (விஜயன்) ஈசனை பூஜித்த தலமாதலால் இத்தலம் திருவிஜயமங்கை என்று பெயர் பெற்றது. அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை லிங்கத்தின் மீது காணலாம்.சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற அர்ஜுனன் இத்தலத்தில் ஈசனை நோக்கி தவம் செய்தான்.ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுர ஆவுடையார் மீது அருள்பாலிக்கிறார்.அர்ச்சுணன் அம்பு பட்ட தழும்பும், வரைகோடும், சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல காணப்படுகின்றன.
அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக