கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பூட்டுதல் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தொழில்நுட்பம் மக்களின் உடற்பயிற்சி நடைமுறைகளில் உறுதியான நிலைபாடை பெற்றுவருகிறது என்பதில் ஆச்சரியமில்லை. நுகர்வோர் மனநிலையில் இவை பெற்ற கணிசமான மாற்றத்தால் மக்கள் வொர்க் அவுட் செய்யும் போது எத்தனை கலோரிகள் எரிக்கப்பட்டது என்பதை மட்டும் அறிவதற்கு பதிலாக ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றியும் அறிந்துக் கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு ஒப்போ தனது புதிய பேண்ட் ஸ்டைலைக் கொண்டு உங்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறது. இது SpO2 உள்ளிட்ட மருத்துவ மற்றும் உடற்பயிற்சி அளவுகளை கண்காணிக்க உதவுகிறது. இரத்த ஆக்ஸிஜன் அளவை நிகழ்நேரமாக கண்காணிப்பதன் மூலம் உடற்பயிற்சிகளை பயனுள்ளதாக மாற்றுவதோடு வரவிருக்கும் ஆபத்துகளையும் அடையாளம் காண உதவுகிறது. ஒப்போ பேண்ட் ஸ்டைலில் 2021 மார்ச் 8 ஆம் தேதி ஒப்போ எஃப்19 ப்ரோ தொடருடன் இணைந்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உடல்நல உணர்வுள்ள அனைவருக்கும் முழுமையான அத்தியாவசியமாக இருக்கிறது குறிப்பாக உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு இந்த சாதனம் அவசியமாக தேவைப்படும். இதில் பிரத்யேக தனித்துவமான 12 ஒர்க்அவுட் அம்சம் உள்ளிட்ட பல வசதியான ஸ்மார்ட் செயல்பாடுகளுடன் உடற்பயிற்சி முன்னேற்றத்தை கண்காணிக்க உதவுகிறது.
மேலும் மேம்பட்ட செயல்திறன் மூலம் பயனர்கள் தங்கள் ரத்த ஆக்ஸிஜன் செறிவூட்டலை கண்காணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்கமான நுகர்வோருக்கு #ActivateYourHealth பயன்பாட்டுக்கு உதவுகிறது. கோவிட் 19 தொற்று நோய்க்கு மத்தியில் வாழும் சமயத்தை கருத்தில் கொண்டால் எஸ்பிஓ2 கண்காணிப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில் இது வீட்டில் இருந்தபடியே ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்க உதவும், குறைந்த ஆக்ஸிஜன் இருக்கும்பட்சத்தில் அதன் அளவுகளை ஆரம்பத்திலேயே கண்காணிக்க முடியும்.
உள்ளமைக்கப்பட்ட ஆப்டிகல் ரத்த ஆக்ஸிஜன் சென்சார் மூலம் ஒப்போ பேண்ட் ஸ்டைல் பயனரின் முழு எட்டு மணிநேர தூக்க சுழற்சியையும் காண்காணிக்கிறது. மேலும் 28,800 முறை வரை இடைவிடாத எஸ்பிஓ2 கண்காணிப்பு நடத்த முடிகிறது. ஆக்ஸிஜன் செறிவு மற்றும் சுவாச வீதத்தின் விரிவான கண்காணிப்பு பயனர்களுக்கு சிறந்த தூக்க பழக்கத்தை உருவாக்கி கண்காணிக்க உதவுகிறது.
இந்த அணியக்கூடிய சாதனத்தின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், அதன் உள்ளமைக்கப்பட்ட ஆப்டிகல் இதய துடிப்பு மானிட்டர் ஆகும். இது பயனரின் இதயத்துடிப்பு நாட்கள் முழுவதும் கண்காணிக்க முடியும். தீடீரென உங்கள் இதயத் துடிப்பு மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் இந்த முறைகேடு குறித்து எச்சரிக்க ஒப்போ பேண்ட் ஸ்டைல் உதவும். மிகவும் எளிமையான செயல்பாடு, உடற்பயிற்சியின் போது இது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவோடு அதிக பயிற்சியைத் தடுக்கவும் எச்சரிக்கிறது.
ஒப்போ அணியக்கூடிய ஸ்டைலான வடிவமைப்பில் எந்தவொரு சிறப்பை விடவில்லை என்றே கூறலாம். கருப்பு மற்றும் வெண்ணிலா ஆகிய இரண்டு ஸ்டைலான வண்ண விருப்பங்களில் இது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 360 டிகிரி மாற்றங்கள் செய்ய உதவுகிறது. அழகான 1.1 இன்ச் முழு வண்ணத்திரை +2.5டி வளைந்த மேற்பரப்பு ஸ்கிராட்ச் எதிர்ப்பு கண்ணாடி மற்றும் 40-க்கும் மேற்பட்ட பல்துறை கண்காணிப்பு முகங்களை கொண்டுள்ளது. ஒப்போ பேண்ட் ஸ்டைல் அதன் நுகர்வோரின் தேவைகளுக்கு ஒரு முழுமையான தொகுப்பை வழங்குகிறது.
உடற்பயிற்சி துறையில் மிகப்பெரிய இயக்கிகளில் ஒன்றாக இந்த தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது. ஒப்போ தனித்துவமான பிராண்டாக உருவெடுத்துள்ளது. முழுமையான உடற்தகுதிக்கான நுகர்வோர் தேவையை இது பூர்த்தி செய்கிறது. ஒப்போ பேண்ட் ஸ்டைல் அடிப்படை உடற்பயிற்சி மற்றும் சிறந்த சுகாதார பங்குகளில் ஒரு சாதனமாக நிரூபிக்க போகிறது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக