கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தடுப்பூசி வந்துவிட்டாலும், அனைவருக்கும் உடனடியாக போட முடியாமல், முன்னுரிமை உட்பட பல தகுதிகளின் அடிப்படையில் நோய் தடுப்பு சக்தி மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் இதே நிலை தொடர்கிறது என்றால், பல விதங்களிலும் முன்னேறிய ஜப்பானும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான அந்நாட்டு அரசின் அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜப்பான் மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை தேர்வு செய்யும் விருப்பத் தெரிவு கொடுக்கப்படும் என்பதே ஆச்சரியகரமான அறிவிப்பு. இந்த தகவலை ஜப்பான் நாட்டு தடுப்பூசி பிரச்சாரத்திற்கு பொறுப்பான மூத்த அதிகாரி ஃபுமியாகி கோபயாஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
"எந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மக்களுக்கு அந்த விருப்பத்தெரிவு உள்ளது, "என்று ஜிஜி செய்தி நிறுவனம், அதிகாரியின் கருத்தை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் எந்த கோவிட் -19 தடுப்பூசிகள் கிடைக்கின்றன என்ற தகவலை அரசாங்கம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் இயக்கம் பிப்ரவரியில் தொடங்கியது. BioNTech/Pfizer தடுப்பூசிகள் ஜப்பான் மக்களுக்கு போடப்படுகின்றன. ஃபைசரைத் (Pfizer) தவிர, அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) மற்றும் மாடர்னா (Moderna)தடுப்பூசிகளையும் நாடு பெற உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக