-----------------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
------------------------------------------------------------
மன்னர் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?
மந்திரி : மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லிட்டான்.
மன்னர் : நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
மந்திரி : அதைதான் சொல்லிட்டான்...!
மன்னர் : 😅😅
------------------------------------------------------------
டாக்டர் : நான்தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்!
நோயாளி : அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?
டாக்டர் : 😮😮
------------------------------------------------------------
ஒரு குட்டிக்கதை...!!
------------------------------------------------------------
ஒரு விமான நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்தது.
அதாவது பிசினஸில் ஈடுபட்டிருப்போர் தங்களது மனைவியுடன் விமான பயணம் மேற்கொண்டால் மனைவிக்கான பயணச்சீட்டு முற்றிலும் இலவசம்..!! என்பதே அந்த சலுகை.
சலுகை வெளியான உடனேயே அத்தனை பயணச்சீட்டுகளும் பதிவாகி விமானம் நிரம்பி வழிந்தது.
இதனால் குஷியான விமான நிறுவனம், அந்தப் பயணத்திற்குப் பின்னர் அனைத்து மனைவிமார்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பி, உங்களது பயணம் எப்படி இருந்தது? என்று கேட்டது.
அதற்கு ஒட்டுமொத்த மனைவிமார்களும் அனுப்பிய ஒரே பதில்...
எந்தப் பயணம்..?
------------------------------------------------------------
மூளைக்கு வேலை...!!
------------------------------------------------------------
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்த குடும்பத் தலைவன். அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள். அங்கே தனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக் கிடப்பதை கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள். காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரணையைத் துவக்கினார். விசாரணையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.
1. மனைவி தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2. தான் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.
3. பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.
4. தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.
5. காரைத் துடைத்து கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.
இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.
யார் குற்றவாளி?
வேலைக்காரன்தான் குற்றவாளியாக இருக்கவேண்டும். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆகவே தபால் பட்டுவாடா கிடையாது!
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக