Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 மார்ச், 2021

மனம் விட்டு சிரிங்க.. இந்த டவுட் உங்களுக்கும் இருக்கா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 

--------------------------------------------------

மனம் விட்டு சிரிங்க...!!

--------------------------------------------------

 

புதிதாக வேலையில் சேர்ந்த ரவி, இரவு 8 மணி வரை கம்ப்யூட்டரில் வேலை செய்ததை கண்ட முதலாளி சந்தோஷத்துடன் என்னப்பா இவ்வளவு நேரம் வேலை பாக்குற என்ன வேலை செய்தாய்.... எனக் கேட்டார். அதற்கு,

 

ரவி : அதுவா சார் கம்ப்யூட்டர் கீபோர்டுல ABCD எல்லாம் மாறி இருந்தது அத சரி செய்தேன்.

முதலாளி : 😧😧

--------------------------------------------------

டீச்சர் : ராமு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?

ராமு : இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.

டீச்சர் : உன்னை மாதிரி ஒரு மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?

ராமு : நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!

டீச்சர் : 😏😏

--------------------------------------------------

சிந்தனை வரிகள்...!!

--------------------------------------------------

 

தொடர்ந்து உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றங்கள் ஆகும் போது, உங்கள் விருப்பங்கள் அனைத்தும் மனதெனும் சிறைக்குள் அடைத்து வைக்கப்படுகிறது மிகுந்த வலிகளுடன். இதற்கு இடம் தராதீர்கள்

 

அவைகள் கவலை எனும் தூசுகளால் படிந்து வாழ்க்கையை சிதைத்து விடும். கடலில் விழுந்தால் கூட எழுந்து விடலாம், கவலையில் விழுந்து விடாதீர்கள், பிறகு எழுவது கடினம்

 

சிறகுகள் நனைந்தால் எந்த ஒரு பறவையும் பறக்க முடியாதுதான், ஆனால் வானத்திடம் மழையே பெய்யாதே என்று கெஞ்சுவது இல்லை. வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். போராடுங்கள் வெற்றி பெறுங்கள்

 

நீச்சல் அடிக்க தெரிந்தவனுக்கு குளம் எவ்வளவு ஆழம் என்பதை பற்றி அறிய தேவையில்லை. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள துணிந்தவனுக்கு பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை.

 

--------------------------------------------------

பயனுள்ள குறிப்புகள்...!!

--------------------------------------------------

 

மாமிச உணவுகளை விரைவாக வேகவைக்க அதனுடன் சிறிது பப்பாளியை சேர்த்தால் போதும் கறி பூப்போல வெந்துவிடும்.

 

கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய எலுமிச்சை பழத்தை ஒரு கப் வெந்நீரில் கலந்து ஸ்டவ்வின் மீது தெளித்துவிட்டு பின்னர் அழுத்தி துடைக்கவும். பளிச்சென்று கேஸ் ஸ்டவ் இருக்கும்.

 

மெழுகுவர்த்தியின் தேவை இல்லாத நேரங்களில் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விட்டால் மெழுகுவர்த்தி சீக்கிரம் உருகாது.

இந்த டவுட் உங்களுக்கும் இருக்கா?

பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்...

.

.

.

.

அப்போ ராத்திரியில தூங்குனா சிக்ஸ் பேக் வருமா?....

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக