ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்களுடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. அதன்படி இப்போது ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
1.39 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே
ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்வாட் ஆனது 1.39 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 454x454 பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 46 எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நோட்டிபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது, மியூசிக், புகைப்படங்களை எடுப்பது போன்ற அம்சங்களை இயக்கும் வசதியை கொண்டு இந்த ஸ்மார்ட் வாட்ச் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
4ஜிபி மெமரி ஆதரவு
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் 4ஜிபி மெமரி ஆதரவு உள்ளது. மேலும் இந்த சாதனம் பெரும்பாலான ப்ளூடூத் இயர்பட்களுடன் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான மென்பொருள் வசதியுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.
ஒன்பிளஸ் டிவி
இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஒன்பிளஸ் டிவியுடன் இணைந்து ரிமோட் போன்று இயங்குகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஒன்பிளஸ் டிவியின் ஒலியை அதிகரிக்கவும், குறைக்கவும் உதவும், பின்பு டிவியை ஆப் செய்ய கூட இந்த ஸ்மார்ட்வாட்ச் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
இதுதவிர 5ATM+IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச். பின்பு 110-க்கு அதிகமான உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.
402 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்-ல் மிகவும் முக்கியம் பேட்டரி வசதி தான். அதன்படி, 402 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு தேவையாக பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருப்பதால், வெறும் ஐந்து நிமிடங்களில் ஒரு நாளைக்கு தேவையான திறனையும், 20 நமிடங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான பேக்கப் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர்
மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் நிறங்களில் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக