Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 4 மார்ச், 2021

இந்திய துறைமுகங்களை தீவிரமாக குறிவைக்கும் Chinese Hackers! திடுக்கிடும் தகவல்

 இந்திய துறைமுகங்களை தீவிரமாக குறிவைக்கும் Chinese Hackers! திடுக்கிடும் தகவல்

மும்பை பவர் பிளாக்அவுட்டுக்குப் பிறகு, சீன ஹேக்கர்கள் இன்னும் தீவிரமாக இந்திய துறைமுகங்களை குறிவைத்து செயல்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் ஏற்பட்ட இருட்டடிப்புக்கு சீன ஹேக்கர்கள் காரணம் என்ரா சந்தேகிக்கப்படும் நேரத்தில், சீன ஹேக்கர்கள் இந்திய துறைமுகங்களை தீவிரமாக குறிவைத்து வருவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

யு.எஸ். ஃபர்ம் ரெக்கார்டட் ஃபியூச்சர் என்ற அமெரிக்க நிறுவனம், தாக்குபவர் இன்னும் தீவிரமாக செயலில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரு இந்திய துறைமுகத்தின் நெட்வொர்க் அமைப்பில் சீன அரசால் வழங்கப்பட்ட ஹேக்கர்களால் திறக்கப்பட்ட ஒரு இணைப்பு  இன்னும் செயலில் உள்ளது என்று அமெரிக்க நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் மின்சாரத் துறை ஊடுருவலை அதிகாரிகள் தடுத்தாலும், இன்னமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதாக அமெரிக்க நிறுவனம் கூறுகிறது.

Recorded Future என்றா சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஸ்டூவர்ட் சாலமன் இந்த தகவலைத் தெரிவித்தார். சீனாவுடன் இணைந்துள்ள குழு ஒன்று, இந்திய துறைமுகத்திற்கு இடையில், போக்குவரத்து பரிமாற்றத்தைக் குறிக்கும் ஒரு ‘சமிக்ஞையை’ அமெரிக்க நிறுவனம் கண்டதாக தெரிவித்தார்.

இந்தியாவின் பவர் கிரிட் மற்றும் இரண்டு கடல் துறைமுகங்களின் கீழ் 10 நிறுவனங்களை ஹேக்கர்கள் குறிவைத்துள்ளதாக RedEcho, Recorded Future நிறுவனம் தெரிவித்தது. இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை அதாவது பிப்ரவரி 28 வரை செயலில் இருந்தன என்றும் அமெரிக்க நிறுவனம் தெரிவிக்கிறது.  

மறுபுறம், பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், எந்த ஆதாரமும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட தரப்பினரை அவதூறு செய்வது பொறுப்பற்ற நடத்தை மற்றும் ஒரு தீமை பொருந்திய எண்ணம் என்று அமெரிக்காவை சூசகமாக சாடினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக