உலகளவில் இப்பொழுது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தான் அதிக மவுசு, காரணம், பயனர்கள் அனைவரும் குறைந்த விலையில் பல சிறப்பான அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனையே பயன்படுத்த விரும்புகின்றனர். இதை அறிந்த நிறுவனங்கள் அனைத்தும் இப்போது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
உதாரணத்திற்கு, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு அதிக மவுசு இருப்பதை உணர்ந்த பின்னர் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் 12 மினி என்ற பட்ஜெட் வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்தது. மற்றொரு உதாரணமாக ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை நாம் கூறலாம். இப்போது, இந்த வரிசையில் கூகிள் நிறுவனமும் ஒன்று சேர்ந்துள்ளது.
கூகுள் நிறுவனம் தற்போது பட்ஜெட் செக்மென்ட்டில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலுக்கு கூகிள் நிறுவனம் கூகிள் பிக்சல் 5ஏ (Google Pixel 5A) என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தோற்றத்தில் இது பார்க்கக் கூகிள் பிக்சல் 4ஏ போன்றே இருக்கிறது.
கூகுள் பிக்சல் 5ஏ மற்றும் கூகிள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் மாடல்களில் உள்ள டிஸ்பிளேகளில் சிறிய பன்ச் ஹோல் நாட்ச் கொண்ட டிஸ்பிளே வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. கூகிள் பிக்சல் 6 மாடலில் செல்பி கேமரா ஸ்மார்ட்போனின் நடுவில் வழங்கப்பட்டு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி பன்ச்-ஹோல் முந்தைய மாடலை விட 10 பிக்சல் அளவு சிறியதாக இருக்கும் என்று தெரிகிறது.
பிக்சல் 5ஏ பன்ச் ஹோல் 55 பிக்சல் அளவு கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற கூகிள் பிக்சல் போன்களில் இது 65 பிக்சலாக இருக்கிறது என்பதும் கவனிக்கவேண்டியது. முந்தைய தகவல்களின் படி, பிக்சல் பட்ஸ் இயர்போன் ஏப்ரல் மாதத்திலும், புதிய பிக்சல் போன் 5 ஏ ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த மாடல் கூகிள் பிக்சல் 5ஏ என்று தான் அழைக்கப்படுகிறது. வெளியீட்டு நேரத்தில் இது என்ன பெயரில் வெளியாகும் என்பது தற்சமயம் தெளிவாகத் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக