Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 12 மார்ச், 2021

GOOGLE நிறுவனத்தின் வரி வசூல் புதிய அறிவிப்பு: அய்யோ பாவம்., வருத்தத்தில் யூடியூபர்கள்.! முழு விவரம்.!

GOOGLE நிறுவனத்தின் வரி வசூல் புதிய அறிவிப்பு:வருத்தத்தில்யூடியூபர்கள்

டெக் ஜெயிண்ட் என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது யூடியூப் படைப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், யூடியூப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கூகிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள யூடியூப் படைப்பாளர்கள் இடமிருந்து யூடியூப் வருவாய்க்கு 24 சதவீதம் வரை வரி வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வரி விலக்குகள் ஜூன் 2021 இல் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகிள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது, "YouTube இல் பணமாக்கும் அனைத்து படைப்பாளிகளும், அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் வரித் தகவலை வழங்க வேண்டும் என்றும், உங்கள் வரி தகவலை விரைவில் சமர்ப்பிக்கவும் என்று தெரிவித்துள்ளது. உங்கள் வரி தகவல் மே 31, 2021-க்குள் வழங்கப்படாவிட்டால், உலகளவில் உங்கள் மொத்த வருவாயில் இருந்து 24 சதவிகிதம் வரை கூகிள் கழிக்க வேண்டியிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது."

இந்த முடிவை விளக்கிய யூடியூப், அமெரிக்க உள்நாட்டு வருவாய் குறியீட்டின் 3 ஆம் சாப்டரின் கீழ் வரி தகவல்களைச் சேகரிக்கவும் வரிகளை நிறுத்தி வைக்கவும் கூகிள் கடமைப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. உண்மையில், இது உள்நாட்டு வருவாய் சேவைக்கு வரி வசூல் மற்றும் வரிச் சட்டங்களை அமல்படுத்துவதற்குப் பொறுப்பானது என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு யூடியூப் கிரியேட்டர் நாட்டில் பார்வையாளர்களிடமிருந்து ராயல்டி வருவாயைப் பெறும்போது புகாரளிக்க வேண்டும் என்பது கட்டாயம்.

உங்கள் வரி தகவலை எவ்வாறு புதுப்பிப்பது?

YouTube படைப்பாளர்கள் தங்கள் அமெரிக்க வரி தகவல்களை Google AdSense பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். படைப்பாளிகள் பின்பற்ற வேண்டிய செயல்முறை இதோ.

  • Google AdSense கணக்கில் லாகின் செய்யுங்கள்.
  • payments கிளிக் செய்க.
  • manage settings என்பதைக் கிளிக் செய்க.
  • payments profile ஸ்க்ரோல் செய்து, நாட்டை தேர்வு செய்து வரி தகவலுக்கு அடுத்து திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  • manage tax information கிளிக் செய்க.
  • தேவையான விவரங்களை நிரப்பவும்.

படைப்பாளிகள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் வரிவிதிப்பு தகவல்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். மேலும், வரி படிவங்களைச் சமர்ப்பிக்கும் போது லத்தீன் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும். படைப்பாளர்கள் தங்களது வழக்கமான AdSense கொடுப்பனவு பரிவர்த்தனை அறிக்கையில் நிறுத்தப்பட்ட இறுதித் தொகையைக் காணலாம். முக்கிய குறிப்பு: இது அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அவர்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கு மட்டுமே பொருந்தும்.

இது இந்திய யூடியூபர்களை எவ்வாறு பாதிக்கிறது?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு YouTube படைப்பாளரும், அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் கூகிளுக்கு அமெரிக்க வரி தகவல்களை வழங்க வேண்டும். வரி நிறுத்தி வைக்கும் தேவைகள் வசிக்கும் நாடு மற்றும் வரி ஒப்பந்த சலுகைகளைக் கோரப் படைப்பாளிகள் தகுதியுள்ளவர்களா என்பதைப் பொறுத்து இது வேறுபடலாம் என்று தெரிகிறது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வரி ஒப்பந்த உறவைக் கொண்டுள்ளது. இது வருவாயில் 15 சதவிகிதத்தை இந்தியர்களுக்குக் குறைக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு படைப்பாளருக்கு ஒரு யூடியூப் சேனலில் இருந்து மாத வருமானம் $ 1000 டாலர்களாக இருந்தால், அதில் $ 100 டாலர் அமெரிக்காவிலிருந்து கிடைத்த வருவாயாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வரி தகவல்கள் சமர்ப்பித்திருந்தால் வெறும் $ 15 டாலர் ($ 100 இல் 15 சதவீதம்) மட்டுமே வரியாக வசூலிக்கப்படும்.

இருப்பினும், இந்திய யூடியூபர்கள் அவர்களின் வரி விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், இந்த இந்திய வரி ஒப்பந்தம் செல்லுபடியாகாது. 15 சதவீதம் மட்டும் கழிய வேண்டிய இடத்தில், வரி விவரங்களை சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் $ 240 டாலராக வசூலிக்கப்படும் என்று கூகிள் நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது மொத்த வருவாயில் இருந்து 24 சதவிகிதம் இந்தியர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அமெரிக்க வருவாய் இல்லாவிட்டாலும் வரி கழிக்கப்படும் என்பதை மறக்கவேண்டாம்.

இப்போது உங்களுக்கு இந்த புதிய வரி விதி பற்றிப் புரிந்திருக்கும் என்றும் நம்புகிறோம். சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் உலகில் எந்த நாட்டில் இருக்கும் யூடியூப் படைப்பாளராக இருந்தாலும் உடனே உங்களின் வரி விவரங்களைக் கூகுளுடன் பதிவு செய்துவிடுங்கள். முக்கியமாக இந்தியர்கள் வரி விவரங்களை சமர்பித்துவிட்டால் வெறும் 15 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும். இல்லை என்றால் கண்டிப்பாக உங்களின் மொத்த வருவாயில் இருந்து 24 சதவீதம் வீணாய் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கூகிள் யூடியூப் படைப்பாளர்களுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்துகிறது என்று ஒரு சிறிய தகவலை இப்போது பார்க்கலாம். இந்த தகவல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. கூகிள் நிறுவனம் அவர்களின் ஆட்ஸன்ஸ் வருவாயில் 68% செலுத்துகிறது, எனவே ஒரு விளம்பரதாரர் செலுத்தும் ஒவ்வொரு $ 100 க்கும் கூகிள் வெளியீட்டாளருக்கு $ 68 செலுத்துகிறது. ஒரு விளம்பரதாரர் செலுத்தும் உண்மையான விகிதங்கள் மாறுபடும், வழக்கமாக ஒரு பார்வைக்கு 0.10 டாலர் முதல் 0.30 டாலர் வரை கிடைக்கும். ஆனால் சராசரியாக ஒரு பார்வைக்கு 0.18 டாலர் என்று சராசரியாக YouTube சேனல் 1,000 விளம்பரக் காட்சிகளுக்கு வழங்குகிறது.

GOOGLE நிறுவனத்திற்கு இனி இந்திய யூடியூபர்கள் 24% வரி செலுத்த வேண்டுமா? அல்லது வெறும் 15% மட்டும் செலுத்தினால் போதுமா என்பதை நீங்கள் சமர்ப்பிக்கும் விபரங்கள் முடிவு செய்யும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக