Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தமிழ் புத்தாண்டு மேஷ ராசிபலன்கள்.. பிலவ வருடம் - பாகம் 01

தனக்கு பிடித்த விதத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே!! பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.

கிரக அமைப்புகள் :

ராசியில் சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்

இரண்டில் செவ்வாயும், ராகுவும்

எட்டில் கேதுவும்

பத்தில் சனியும்

பதினொன்றில் குருவும்

பனிரெண்டில் புதனும் அமர்ந்து இருக்கும் இந்த தருணத்தில் பிலவ வருடம் பிறந்துள்ளது.

 

பலன்கள் :

எந்தவொரு செயலிலும் வேகமின்றி விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் லாபத்தை பெற முடியும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களையும், எண்ணங்களையும் அறிந்து செயல்படுவீர்கள். மனதில் தாய் பற்றிய சிந்தனைகள் மற்றும் பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் இழுபறிகள் அகலும். எதிர்பாராத சில நேரங்களில் மாற்றமான வாய்ப்புகளால் மேன்மை உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். உயரதிகாரிகளிடத்தில் விருப்பு, வெறுப்புகளின்றி விட்டு கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல்கள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர்கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

பெண்களுக்கு :

உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் அவர்களின் கலந்துரையாடல்களில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. நவீன தொழில்நுட்பம் தொடர்பான பொருட்களை கையாளுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வியாபாரிகளுக்கு :

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் உடனிப்பவர்களின் புகழ் சொற்களுக்கு செவி சாய்க்காமல் நிதானத்துடன் முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கட்சி தொடர்பான உயரதிகாரிகளின் ஆதரவுகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வதன் மூலம் நன்மதிப்பை பெற முடியும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் படிப்படியாக குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை வெள்ளைநிற பூக்களினால் பூஜை செய்து வழிபாடு செய்துவர நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருக்கக்கூடிய விஷயங்களுக்கு தீர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!