
ஆக்ஸிஸ் வங்கி அதன் எஸ் எம் எஸ் மற்றும் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது.
இந்த கட்டண உயர்வானது மே 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆக ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இதனையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
மினிமம் பேலன்ஸ் தொகை அதிகரிப்பு
ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளார்கள் தங்கள் அக்கவுண்டில் வைத்திருக்கும் 10,000 ரூபாய்க்கு பதிலாக, குறைந்தபட்ச இருப்பு தொகையாக 15,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இதே பிரைம் மற்றும் லிபர்டி சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு மினிமம் பேலன்ஸ் என்பது 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அபராதம் எவ்வளவு?
ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் அகவுண்டில் வைத்திருக்கும் 10,000 ரூபாய்க்கு பதிலாக, குறைந்தபட்ச இருப்பு தொகையாக 15,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இதே பிரைம் மற்றும் லிபர்டி சேவிங்ஸ் அகவுண்ட் வைத்திருப்போருக்கு மினிமம் பேலன்ஸ் என்பது 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச & அதிகபட்ச கட்டணம்
எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்ன வெனில், மினிமம் பேலன்ஸ் தொகை இல்லாவிடில் விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் என்பது 150 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிகபட்ச கட்டணம் என்பது 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் கட்டணங்கள்
ஒவ்வொரு மாதமும் கட்டணமில்லாமல் 4 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு எடுக்கும்போது ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 10 ரூபாய் வசூலிக்கப்படும். அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இது முன்னதாக 5 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் அதிகபட்சம் 150 ரூபாய் வரையிலும், 4 இலவச பரிவர்த்தனைகளும் இருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக