Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 ஏப்ரல், 2021

மாத சம்பளதாரர்களுக்கு ஏற்ற திட்டங்கள்.. தினசரி 3 ஜிபி டேட்டா.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல்.. எது சிறந்தது!

 ரூ558 கீழான ரீசார்ஜ் திட்டம்

நாட்டில் இரண்டாம் கொரோனாவின் தாக்கம் என்பது மிக வேகமாக பரவி வரும் நிலையில், சில மாநிலங்களில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இதனால் நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன. குறிப்பாக ஐடி ஊழியர்கள் ஒர்க் பிரம் ஹோம் ஆப்சனில் பணியாற்றி வருகின்றனர்.

இப்படியொரு நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு ஏற்ப சில ஆஃபர்களை வழங்கி வருகின்றன.

ரூ558 கீழான ரீசார்ஜ் திட்டம்

நாம் இன்று ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் டேட்டா சலுகைகளை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம். அந்த வகையில் நாம் இன்று முதலாவதாக பார்க்கவிருப்பது, 558 ரூபாய் மதிப்பிலான ஏர்டெல்லின் திட்டத்தினைத் தான். இந்த திட்டத்தில் தினசரி வாடிக்கையாளர்கள் 3ஜிபி ஹை ஸ்பீடு டேட்டாவினை பெற முடியும். அதோடு அன்லிமிடெட் கால் சேவை, 100 இலவச எஸ் எம் எஸ் உண்டு. இதன் வேலிடிட்டி 56 நாட்களாகும்.

என்னென்ன சலுகைகள்?

இது தவிர இந்த 558 ரூபாய் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ, எக்ஸ்ட்ரீம் சர்வீசஸ், இலவச ஹலோ டியூன், இலவச அப்பல்லோ 24/7 சர்கிள் சேவை, விங்க் மியூசிக், இலவச ஆன்லைன் கோர்ஸ்கள், பாஸ்டேக் சலுகை என பலவும் இந்த திட்டங்களில் கிடைக்கின்றன.

ரூ801 கீழான திட்டங்கள்

இதே ரூ801 மதிப்பிலான திட்டத்தில் வோடபோன் ஐடியா தினசரி 3ஜிபி ஹை ஸ்பீடு டேட்டாவினை 84 நாட்களுக்கு வழங்குகிறது. அதோடு கூடுதலாக 48 ஜிபி டேட்டாவினையும் வழங்குகிறது. இதோடு அன்லிமிடெட் டேட்டா, 100 இலவச எஸ் எம் எஸ் என பலவும் வழங்குகிறது. இவற்றோடு வீஐ மூவிஸ் & டிவி, வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் திட்டம், ஒரு வருட இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவினையும் வழங்குகிறது. 

ரூ999 கீழான திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ 999 ரூபாய் மதிப்பிலான ப்ரீபெய்டு திட்டத்தினை வழங்குகிறது. இது 84 நாட்களுக்கு வேலிடிட்டியை கொண்டது. இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி ஹை ஸ்பீடு டேட்டா, அன்லிமிடெட் காலிங் சேவை, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இது தவிர ஜியோ ஆப், ஜியோ டிவி, ஜியோ மணி சேவைகளையும் வழங்குகிறது. இது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் ஒப்பிடும்போது ஜியோவின் இந்த திட்டம் கொஞ்சம் விலை அதிகமான திட்டம் என்பதால் மாத சம்பளதாரர்களுக்கு ஏர்டெல், வோடபோன் திட்டங்கள் சிறந்ததாக தோன்றலாம்.

சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்

பொதுவாக இந்த மாதிரியான திட்டங்கள் மாத சம்பளதாரர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களும் வரம்பற்ற தரவு மற்றும் அழைப்புத் திட்டங்களை வழங்குகிறார்கள். இருப்பினும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சலுகையை வழங்குகின்றன. இதில் உங்களுக்கு எது ஏற்றதோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக