7 ஏப்., 2021

சத்தமில்லாமல் ஏர்டெல் நிறுவனத்தின் 800மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை வாங்கிய ஜியோ?

800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம்

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஜியோ நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற பகுதிகளுக்குட்பட்ட 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஆயிரத்து 497 கோடி ரூபாய்க்கு ஜியோ நிறுவனத்திடம் பாரதி ஏர்டெல் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜியோ நிறுவனத்திடம் இருந்து ஆயிரத்து 37 கோடி ரூபாய் தொகை பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள 459 கோடி ரூபாய் வருங்கால பொறுப்பு நிதிகளாக வழங்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற தொலைத் தொடர்பு சரகங்களில் ஜியோவின் நெட்வொர்க் பங்களிப்பு அதிகரிக்கும் எனறு கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்