Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 15 ஏப்ரல், 2021

Alert-வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: RTGS கட்டண முறை இந்த நாட்களில் வேலை செய்யாது



இந்தியன் ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதுஏப்ரல் 17 2021 ஆம் தேதி வணிக நேரத்திற்குப் பிறகுஏப்ரல் 18, 2021, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை வங்கி பயனர்கள் நிகழ்நேர மொத்த தீர்வு (RTGS) கட்டண பரிமாற்ற முறையை பயன்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதுதொழில்நுட்ப ரீதியாக தனது RTGS சேவையை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக இந்த நிறுத்தம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி (RBI) தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், "RTGS-ல் அவ்வப்போது ஏற்படும் பின்னடைவை மேம்படுத்தவும்,  RTGS அமைப்பின் பேரழிவு மீட்பு நேரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் இதில் ஏப்ரல் 17 2021-க்குப் பிறகு தொழில்நுட்ப மேம்பாடு குறித்த பணிகளைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்துவாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துமாறும்அவர்கள் தங்களது கட்டண செயல்முறைகளை முன்னரே திட்டமிட உதவுமாறும் ரிசர்வ் வங்கிவங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதுஇதற்கிடையில்பயனர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் நிதிகளை பரிமாற்ற தேசிய மின்னணு நிதி பரிமாற்ற (NEFT) சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

RTGS க்கும் NEFT க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

RTGS மற்றும் NEFT இரண்டும் டிஜிட்டல் கட்டண முறைகள் ஆகும்இருப்பினும்இரண்டிற்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. RTGS பரிவர்த்தனைகள் பெரிய அளவிலான தொகைகளை மட்டுமே கையாள்கின்றனரூ .2 லட்சத்துக்கு மேலான நிதியை RTGS வழியாக அனுப்பலாம். NEFT கட்டண முறையில் அத்தகைய வரம்பு எதுவும் இல்லை.

சுருக்கமாகபெரிய தொகையின் பரிமாற்றத்திற்கு RTGS சேவை பரிந்துரைக்கப்படுகிறதுரூ .2 லட்சத்திற்கும் குறைவான தொகையை பரிமாற்ற NEFT சரியான செயல்முறையாக இருக்கும்மேலும்ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை பயனர்கள் பரிமாற்றலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

முன்னதாகரிசர்வ் வங்கி ஏப்ரல் 7, 2021-ல் வெளியிடப்பட்ட தனது சமீபத்திய நாணயக் கொள்கை அறிவிப்புகளில் சில புதிய நடவடிக்கைகளைப் பற்றி கூறியுள்ளதுஇதன் மூலம், Amazon Pay, Paytm, PhonePe, MobiKwik, PayU மற்றும் Ola Pay போன்ற வாலட்டுகள் அளிக்கும் சலுகைகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கும்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மொபைல் வாலட்டின் பயன்பாடுகளை அதிகரிக்கும் மூன்று முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தார்ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) வழங்குநர்கள்கார்டு நெட்வொர்க்குகள்ஒயிட் லேபிள் ஏடிஎம் (WLA) ஆபரேட்டர்கள்வர்த்தக பெறுதல் தள்ளுபடி அமைப்பு (TReDS) இயங்குதளங்கள் உள்ளிட்ட வங்கி அல்லாத நிறுவனங்களின் கட்டண அமைப்புகளுக்கு RTGS மற்றும் NEFT கட்டண முறைகளை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளதுவங்கி அல்லாத கட்டண அமைப்பு ஆபரேட்டர்களில் Amazon Pay, Paytm, PhonePe, MobiKwik, PayU மற்றும் Ola Pay போன்றவை அடங்கும்இனி இந்த சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு RTGS மற்றும் NEFT முறைகள் வழியாக நிதியை பரிமாற்ற உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக