Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 ஏப்ரல், 2021

எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்.. பக்தனின் சாமர்த்தியம்.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------

ஒரு ரூபாய்... ஒரு நிமிஷம்...!!

-------------------------------------------------------------

ஒரு சமயம், கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன், கேட்டான்...

'சாமி, ஒரு கோடி வருஷங்கறது உங்களுக்கு எவ்வளவு நேரம்?"

இறைவனும் சிரித்துக் கொண்டே 'ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம்" என்றார்.

அதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன் 'அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது, சாமி?"

அவரும், 'ஒரு ரூபாய் போல" என்றார்.

உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், 'அப்ப, எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்" என்றான் மிகவும் அடக்கமாய்...

இறைவனும், மென்மையாக சிரித்துக் கொண்டே 'நீ ஒரு நிமிஷம் பொறு" என்றாராம்...😜😜

-------------------------------------------------------------

இன்றைய தகவல்...!!

-------------------------------------------------------------

🐬 சுறா மீன்கள் மனிதர்கள் இருக்கும் இடங்கள் மற்றும் மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்களை சரியாக அறிந்துகொள்கின்றன

🐬 உலகத்தில் எந்த ஒரு மீன் இனத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த சுறா மீன்களுக்கு இருக்கிறதாம். அதுதான் இதயத் துடிப்பை உணரும் சிறப்பு.

🐬 ஆம் இந்த சுறா மீன்கள் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீந்தும் மனிதர்கள் மற்றும் மீன்களின் இதயத் துடிப்பை உணர்ந்து எளிதில் அந்த இருப்பிடத்தை அடைந்து தங்களுக்குத் தேவையான உணவுகளை தினமும் பிடித்துக் கொள்கின்றனவாம்.

-------------------------------------------------------------

மராத்திதமிழ்

-------------------------------------------------------------

1. காகிதம் - தாள்

2. கில்லாடி - கொடியோன்

3. அபாண்டம் - வீண்பழிக்கூற்று

4. அட்டவணை - பொருட்குறிப்பு பட்டியல்

5. பேட்டைபுறநகர்

-------------------------------------------------------------

புதிர் கேள்விகள்...!!

-------------------------------------------------------------

1. இந்த நீரை குடிக்க முடியாது. கையாலும் அள்ள முடியாது. குடத்திலும் பிடிக்க முடியாது. கண்களுக்கு மட்டுமே விருந்தாகும். அது என்ன?

.

.

.

.

.

கானல்நீர்

2. இது தேவைப்படும் போது தூக்கி எறியப்படும். ஆனால் தேவையில்லாத போது பத்திரப்படுத்தி வைக்கப்படும். அது என்ன?

.

.

.

.

.

நங்கூரம்

3. ஒரு கண் மட்டுமே உண்டு. ஆனாலும் என்னால் பார்க்க முடியாது. நான் யார்?

.

.

.

.

.

ஊசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!