Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 ஏப்ரல், 2021

என்ன கொடுமை இது?... கடவுளுக்கே அடையாளம் தெரியாமல் போயிருச்சே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------------------

செம காமெடி...!!

----------------------------------------------------------------

32 வயதுப் பெண்மணி ஒருவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பிற்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள். என் காலம் முடிந்துவிட்டதா? என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம். இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன என்றார் கடவுள். இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

 

பிழைத்து விழித்ததும், அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள். என் மூக்கைச் சற்று நிமிர்த்தி தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள். தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி, என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள். என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது என்றாள்.

 

ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது. கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள். எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள். இளைஞர்களின் கண்கள் அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள்.

 

வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள். அந்த இடத்திலேயே உயிர் இழந்தாள். கடவுளின் முன் கொண்டு போகப்பட்டாள். எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? என்று கோபமாகக் கேட்டாள். அட, நீயா அது? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே! என்றார் கடவுள்.😆😎😇

------------------------------------------------------------------------------

கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?

 

நாம் அறிந்த விளக்கம் :

 

ஒரு கலம் மாவினை ஒருவள் இடித்துச் சலிக்க, மற்றொருவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்து விட்டு நல்ல பேர் வாங்கிக் கொள்கிறாள். இது நாம் அறிந்த விளக்கம். 

 

விளக்கம் :

 

தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை தான் இது. வீட்டில் கல்யாணம் என்றால் எல்லா வேலைகளையும் செய்வது மருமகளே. ஆனால் மேம்போக்காக வேலைகளை செய்துவிட்டு தன் அம்மாவிடம், அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்தனார் தான். இதுவே இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.

------------------------------------------------------------------------------

தமிழ் சொற்கள்...!!

------------------------------------------------------------------------------

 

தியானம் - ஊழ்கம்

 

திராட்சை - கொடி முந்திரி

 

திரிமூர்த்தி - முத்திருமேனி

 

திருப்தி - பொந்திகை

 

தினம் - நாள்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!