Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 ஏப்ரல், 2021

மாயச்சதுரம்... முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் கண்டுபிடியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-------------------------------------------------------------

ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியாக சோமு சென்றிருந்தார்..

கணவன், மனைவியிடம் காபி போட்டு கொண்டு வருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும் இல்லை.. சர்க்கரையும் இல்லை.. என்று அடுப்பங்கரையிலிருந்து மனைவி சத்தமிட்டார்.

எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான் கணவன் சத்தமிட வாய்ப்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான். இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா என்று அழ ஆரம்பித்தாள்...

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார் சோமு..

அவர் வெளியேறியதும் 'கல கல"வென சிரித்தனர் கணவனும், மனைவியும்...

எப்படி இருந்தது என் நடிப்பு? அடிப்பது போல் அடித்தேனே... என்றான் கணவன்..

ஆஹா.. அழுவது போல் அழுதேனே.. எப்படி இருந்தது என் நடிப்பு? என்றாள் மனைவி.. 

பிரமாதம் என்றான் கணவன்..

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது...

நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி வந்துவிட்டேன்.. என்றார் சோமு..😳😬😖

-------------------------------------------------------------

மாயச்சதுரம்...!!

-------------------------------------------------------------

முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றாக அமைந்த மூன்று சொற்கள் உள்ளன. முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் கண்டுபிடியுங்கள்...!!

_ங்__ழ__ரு_

விடை கீழே...!!👇👇

-------------------------------------------------------------

விடுகதைகள்...!!

-------------------------------------------------------------

1. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு, இவனுக்கு மட்டும் ஓய்வில்லை, இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன? 

2. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது. அது என்ன? 

3. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? 

4. உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்? 

5. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்? 

விடை :

1. மூச்சு 

2. விமானம்

3. கடிதம்

4. எறும்பு 

5. தென்றல்

-------------------------------------------------------------

அழகு குறிப்புகள்...!!

-------------------------------------------------------------

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

-------------------------------------------------------------

விடை :

-------------------------------------------------------------

1. பங்கு

2. பழகு

3. பருகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!