Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 ஏப்ரல், 2021

இந்தியா: பட்ஜெட் விலையில் அட்டகாசமான புதிய நோக்கியா இயர்போன் அறிமுகம்.!

 தனித்துவமான வடிவமைப்பு

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3100 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த சாதனங்களை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான வடிவமைப்பு கொண்டுள்ளதால் இந்த சாதனங்கள் அதிக வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் மெல்லிய மற்றும் சிறந்த வடிவமைப்பில் பரீமியம் பொருட்களை வாங்க விரும்புவோருக்காக தான் இந்த புதிய ஆடியோ சாதனங்கள் உருவாகப்பட்டுள்ளன.\ 

நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மாடல் 

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மாடல் ஆனது குவால்காம் QCC3034 ப்ளூடூத் ஆடியோ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதில் குவால்காம் cVc எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் சப்ரெஷ் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 சாதனம் ஆனது 24-பிட் ஹெச்டி ப்ளூடூத் ஆடியோ வசதியை வழங்குகிறது. பின்பு இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ஆனது ரெபிட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 9 மணி நேர பிளேபேக் வழங்குகிறது 

நோக்கியா ட்ரு வயர்லெஸ் இயர்போன் ANC T3110 

அடுத்து நோக்கியா ட்ரு வயர்லெஸ் இயர்போன் ANC T3110 மாடல் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த இரண்டு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மாடலின் விலை ரூ.1,999-ஆக உள்ளது. பின்பு வயர்லெஸ் இயர்போன் ANC T3110 மாடலின் விலை ரூ.3,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 9-ம் தேதி இந்த இரண்டு சாதனங்களும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக