Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 22 ஏப்ரல், 2021

ரமலான் ஸ்பெஷல் மட்டன் ஹலீம்

 Mutton haleem recipe by Namrah Qureshi at BetterButter

 ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமியர்கள் பலரும் ரமலான் நோன்பை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பார்கள். இந்த நோன்பின் போது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் மற்றும் சூரிய உதயத்திற்கு பின் மட்டுமே உணவை உட்கொள்ள வேண்டும். அதுவரை பகல்பொழுதில் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். அப்படி நோன்பு முடிந்த பின் சாப்பிடும் உணவானது சத்துக்கள் நிறைந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதோடு சுவையானதாகவும் இருக்க வேண்டுமென பலர் நினைப்பார்கள்.

அப்படி சுவையாக இருக்கும் ஒரு ரமலான் ஸ்பெஷல் ரெசிபி தான் மட்டன் ஹலீம். உங்களுக்கு மட்டன் ஹலீம் எப்படி செய்வதென்று தெரியாதா? கீழே மட்டன் ஹலீம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 1/2 கிலோ

* கோதுமை ரவை - 1/2 கப்

* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

* பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டேபின் ஸ்பூன்

* தயிர் - 1 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* மிளகு - 1 டீஸ்பூன்

* பொன்னிறமாக வதக்கிய வெங்காயம் - சிறிது

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* மட்டன் வேக வைத்த நீர் - 6 கப்

* புதினா - சிறிது

* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

* நெய் - 1/4 கப்

* எலுமிச்சை துண்டுகள் - சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மட்டனை உப்பு மற்றும் தயிர் சேர்த்து பிரட்டி அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு கோதுமை ரவையை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதேப் போல் மற்ற பருப்புக்களையும் நீரில் தனித்தனியாக 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* 3-4 மணிநேரம் கழித்து, ஊற வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் பருப்புக்களில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிவிடுங்கள்.

* பிறகு ஒரு கனமான நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவை மற்றும் பருப்புக்களை போட்டு சில நிமிடங்கள் கிளறி, பின் ஒரு கப் நீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

* பருப்புகள் நன்கு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் வேக வையுங்கள்.

* அதன் பின் பச்சை மிளகாய் விழுது, சீரகம், மிளகு, இஞ்சி பூண்டு விழுது, பொன்னிறமாக வதக்கிய வெங்காயம், கரம் மசாலா, மட்டன் நீர்/நீர் சேர்த்து கிளறிவிடுங்கள்.

* பின்பு அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடி வைத்து குறைவான தீயில் ஒரு மணிநேரம் வேக வைக்க வேண்டும்.

* பின் மூடியைத் திறந்து, வாணலியில் உள்ள மட்டன் துண்டுகளை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு கரண்டி அல்லது ஹேண்ட் பிளெண்டரைக் கொண்டு வாணலியில் உள்ள கலவையை நன்கு நசுக்கி விட வேண்டும்.

* பிறகு மட்டன் துண்டுகளை மீண்டும் வாணலியில் சேர்த்து, நெய் ஊற்றி நன்கு கிளறிவிட்டு, அடுப்பை அணைக்க வேண்டும்.

* இறுதியில் பொன்னிறமாக வதக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை துண்டுகளால் அலங்கரித்தால், சுவையான மட்டன் ஹலீம் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!