கரப்பான் பூச்சிகள் மிகவும் அருவெறுப்பானவை. இந்த மோசமான உயிரினத்தை வீட்டு சமையலறை மற்றும் கழிவறையில் அதிகம் பார்த்திருப்பீர்கள். இது உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இதைக் கண்டு அச்சம் கொள்வோர் ஏராளம். கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆபத்தான பாக்டீரியாக்களை பரப்பக்கூடியவை. இந்த சிறு பூச்சிகளால் உணவுகள் கூட மாசுபடுத்தப்படும்.
முக்கியமாக கரப்பான் பூச்சிகளை வீட்டை விட்டு விரட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த கரப்பான்பூச்சிகளை எளிதில் விரட்ட ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சிகளே இருக்காது.
கரப்பான்பூச்சிகள்
பலர் தங்கள் வீடுகளில் கரப்பான் பூச்சி பிரச்சனையால் போராடி வருகிறார்கள். பொதுவாக கரப்பான் பூச்சிகள் வெதுவெதுப்பான, ஈரப்பதமான இடங்களையே விரும்பும். அதனால் தான் சில சமயங்களில் கரப்பான்பூச்சிகளை உணவிலும் காண முடிகிறது. மேலும் கரப்பான்பூச்சிகள் வீட்டுச் சமையலறை மற்றும் கழிவறையில் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் அதிகம் இருந்தால், அதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கரப்பான் பூச்சிகள் ஈ.கோலி பாக்டீரியாவை பரப்பி சால்மோனெல்லாவை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் அடிக்கடி கரப்பான்பூச்சியைக் காண நேரிட்டால், உடனே அதை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். கீழே கரப்பான் பூச்சிகளை விரட்டும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுத்தமான வீடு
இது மிகவும் முக்கியமான ஒன்று. வீடு சுத்தமாக இருந்தால், கரப்பான்பூச்சி பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். கரப்பான்பூச்சிகளுக்கு அசுத்தமான இடங்கள் பிடிக்கும் என்பதால், குறிப்பாக உணவுக் குப்பைகளை போடும் குப்பைத் தொட்டியை தினமும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
ஹேர் ஸ்ப்ரே
கரப்பான்பூச்சிகளை விரட்ட ஒரு பாட்டில் ஹேர் ஸ்ப்ரே இருந்தால் போதும். அதற்கு அந்த ஹேர் ஸ்ப்ரேயை கரப்பான்பூச்சியின் மீது தெளித்தால், அதனால் நகர முடியாது. ஏனெனில் ஹேர் ஸ்ப்ரேயானது அதன் கால்கள் மற்றும் இறக்கைகளை ஒட்டிக் கொள்ளும். பின் அது மெதுவாக மூச்சு திணறி இறந்துவிடும். ஒருவேளை மீண்டும் நகர ஆரம்பித்தால், மறுபடியும் அதன் மேல் ஹேர் ஸ்ப்ரேயை அடியுங்கள்.
பிரியாணி இலை
கரப்பான்பூச்சிகளுக்கு பிரியாணி இலையின் வாசனை பிடிக்காது. எனவே உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் எவ்விடத்தில் அதிகம் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ, அவ்விடத்தில் பிரியாணி இலையை நொறுக்கிப் போடுங்கள். இதனால் அந்த வாசனைப் பிடிக்காமல் கரப்பான் பூச்சி வேறு இடம் தேடி வெளியே சென்றுவிடும்.
அம்மோனியா
அம்மோனியாவின் வாசனை சற்று கடுமையாகத் தான் இருக்கும். இருப்பினும், இந்த வழியை முயற்சிக்கும் முன் மற்ற வழிகளை முயற்சித்துப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் வாசனையைப் பொருட்படுத்தாவிட்டால், அம்மோனியாவால் கரப்பான்பூச்சி அதிகம் சுற்றும் பகுதிகளை சுத்தம் செய்யுங்கள். அதற்கு 2 கப் அம்மோனியாவை ஒரு வாளி நீரில் கலந்து, சுத்தம் செய்யுங்கள். இதனால் கரப்பான்பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
ஒட்டும் டேப் ட்ரிக்
இது மிகவும் எளிமையானது. அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்கும். அதுவும் இரண்டு பக்கம் ஒட்டும் நல்ல தரமான டேப்புகளை வாங்க வேண்டும். பின் அதை ஒரு போர்டில் ஒட்டி, இரவு தூங்க செல்லும் முன் கரப்பான்பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் வையுங்கள். ஏனெனில் நாம் தூங்க சென்ற பின்பு தான் கரப்பான்பூச்சிகள் வெளியே வரும். எனவே இச்சமயத்தில் செய்வதே நல்லது. இதனால் மறுநாள் காலையில் கரப்பான்பூச்சி சிக்கியுள்ள அந்த போர்டை தூக்கி எறிந்துவிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக