>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 22 ஏப்ரல், 2021

    ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகளின் கவனத்திறன் மேம்படுவதை பெற்றோர்கள் அறிந்து கொள்வது எப்படி?

     Chennai: Attending classes online is a 'snooze fest' for most kindergarten  students | Chennai News - Times of India

    நாம் கல்வியை எவ்வாறு பார்க்கிறோம்; குழந்தைகள் அதிலிருந்து என்ன பெற வேண்டும் என்பதை கடந்த ஆண்டு உண்மையிலேயே மாற்றியமைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக மரபு ரீதியான வகுப்பறை சூழல் என்பது கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பாகவும் கடுமையான விதிகளுடனும் செயல்படக் கூடியது.

    ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகளின் கவனத்திறன் மேம்படுவதை பெற்றோர்கள் அறிந்து கொள்வது எப்படி?

    மின்-கற்றல்வழிக்கு குழந்தைகள் திரும்ப வேண்டிய சூழல் உருவானபோது, கல்வி நிறுவனங்களும் தங்களுடைய அணுகுமுறைகளில் நெகிழ்வுத் தன்மை செய்ய வேண்டியிருந்தது. அதை நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டன. ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகள் புதிய விஷயங்களை பாதுகாப்பான முறையில் கற்றுக் கொள்ள வழிவகை செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கல்விமுறையில் குறிப்பாக பள்ளிக் கல்வியின் எதிர்காலம் குறித்த புதிய உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன.

    நிபுணர்கள் மற்றும் நிறுவனங்கள் நாம் இறுக்கமான கற்றல் நிலையிலிருந்து நீர்த்த தன்மையுடைய கற்றல் அமைப்பை நோக்கி செல்ல, இந்த மின் கற்றல் முறை எனும் புதிய அமைப்பு அடித்தளமாக இருக்குமென நம்புகின்றன. எனவே, இந்த வளர்ந்து வரும் கல்வி முறையில் தங்களுடைய குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, அவர்களுக்கான கற்றல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மிக முக்கியம். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்ள தங்களால் இயன்றதைச் செய்ய முயன்று வரும் போது, உங்கள் குழந்தைகளுக்கும் வேறெந்த கவனச் சிதறல்களும் இல்லாமல் கற்றலில் கவனிக்கும் திறன் அதிகரிக்கச் செய்யும்.

    கற்றலுக்கும் கவனிக்கும் திறனுக்கும் உள்ள புரிதல்

    நீண்ட காலமாக, கவனித்தல் என்பது ஒரு பொருளை அல்லது ஷயத்தை உற்றுநோக்குவது என்று மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிது. ஆனால் கவனம் என்பது இதைத் தாண்டி, கவனித்தல் என்பதில் இன்னும் நிறைய உள்ளது. உண்மையில் கவனம் என்பது ஒன்றை உற்றுநோக்குவதைத் தாண்டி, நாம் உற்றுநேக்கிய ஒன்றிலிருந்து என்ன விஷயத்தைப் புரிந்து கொள்கிறோம் என்பது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த புரிதல் ஆன்லைன் கற்றலில் மிக முக்கியமானது, ஏனெனில் இணையத்தின்வழி கற்றலில் கவனச் சிதறலுக்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.

    ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகள் தங்கள் கவனிக்கும் திறன்களை அதிகரிக்க புதிய புதிய விஷயங்களை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவை கிட்டத்தட்ட குழந்தைகள் ஆன்லைனில் சிறப்பாக கற்பதற்குரிய சூழலும், கற்றுக் கொள்ள உதவுவதற்கான திறவுகோலாக இருக்க வேண்டியது அவசியம். இந்த ஆன்லைன் வகுப்பில் உள்ள இன்னொரு மிகப்பெரிய சவாலும் சிரமமும் என்னவென்றால், குழந்தைகள் தொடர்ந்து அதிக நேரம் கணினித் திரையில் உட்கார்நு்து வகுப்புகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இது ஒருவகையில் குழந்தைகளுக்கு மிகப்பெரும் கவனச் சிதறலையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    குழந்தைகளின் கவனிக்கும் திறன் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

    கவனித்தல் என்பது பல அடுக்குகளை உள்ளடக்கியது. அதை அளவிட நிறைய கருவிகள் உள்ளன. பெற்றோரும் ஆசிரியர்களும் ஒவ்வொரு மாணவரையும் அவரவர் கவனத்திறன்களுக்கு ஏற்ப அவர்களை வழிநடத்திச் செல்வது அவசியம். நாம் பொதுவான ஒன்றின்மீது கவனத்தைக் குவிக்கிறோம். ஆனால் எல்லா குழந்தைகளும் வேறுவேறானவர்கள். அவர்களுடைய விருப்பம் வேறுவேறு துறை சார்ந்ததாக இருக்கும். அதை கவனிப்பது தான் குழந்தைகளின் கவனத்திறனை அதிகரிக்கும் கருவியாக இருக்கும். TALi போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற நுண்ணிய விஷயங்களில் தான் தங்களுடைய கவனத்தைச் செலுத்துகின்றன.

    திறன் மேம்பாடு குறித்த ஆய்வுகள் கவனம் பெற்றிருக்கும் காலகட்டம் இது. TALi இந்தியாவில் இதுகுறித்த ஆய்வில் கவனம் செலுத்துவதோடு, பெற்றோர்களுக்கு தங்களுடைய குழந்தைகளையும் அவர்கள் செய்யும் செயல்களின் வழியாக அவர்களின் திறன்களைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. கூடுதலாக உங்களுடைய குழந்தைகளின் கூடுதல் திறமைகளைப் புரிந்து கொண்ட விஷயங்களைப் பற்றிய விரிவான தேர்வு மற்றும் சோதனைத் திட்டங்களும் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியும் அடங்கும்.

    TALi- யின் இந்த மதிப்பீட்டு முறையும் பயிற்சியும் குழந்தைகளின் கவனத் திறன்களை மேம்படுத்தவும் கண்காணிக்கவும் மிக எளிதானதாக இருக்கும். தினசரி பயிற்சிகளும் தேர்வுகளும் கொடுக்கப்படுகின்றன. அதோடு குழந்தைக்கு கூடுதலாக திறமையுள்ள துறைகளும் எதில் குழந்தை பலவீனமாக இருக்கிறது என்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த முறையினால் குழந்தைகளின் ஆசிரியர்களும் அவர்களுடைய மறைந்திருக்கும் திறன்களைப் புரிந்து கொள்ள உதவி செய்கிறது.

    TRAIN - ஓர் விளையாட்டுடன் கூடிய குழந்தைகளுக்கான பயிற்சி

    TRAIN என்பது நரம்பியல் மற்றும் உளமேம்பாட்டின் அடிப்படையில் 25 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்ட பின், குழந்தைகளின் திறன்களை கண்டறிவதற்கான உருவாக்கப்பட்ட பயிற்சி முறையாகும். TRAIN பயிற்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது. இது பள்ளியிலும் குழந்தைகளின் திறன்களின் மேல் கவனம் செலுத்தி அதை மேம்படுத்த உதவுகிறது.

    TALi - 3-8 வயதுக்கு இடைபட்ட குழந்தைகளுக்கு விளைாட்டுடன் கூடிய பயிற்சியையும் அதன்மீதான அவர்களுடைய கவனத்தைக் குவிப்பதிலும் அக்கறை செலுத்துகிறது. எல்லா குழந்தைகளுக்குமான சில பொதுவாக பயிற்சி முறைகளும் இதற்குள் அடங்கியிருக்கும். அதோடு உங்கள் குழந்தைகளுடைய தனித்திறன் மற்றும் பொழுதுபோக்கு குறித்து தெரிந்து கொண்டு, அதை படைப்புத் திறன் உள்ளதாக மாற்றுவதும் இந்த பயிற்சியின் முக்கிய அங்கமாக இருக்கிறது.

    விளையாட்டுக்களின் மூலம் உற்சாகப்படுத்துவது, ஆர்வத்தைத் தூண்டுவது, திறன்களை மேம்படுத்துவது, அவர்களுடைய மற்ற நண்பர்களுடன் ஆன்லைனில் உரையாடச் செய்வது என கொஞ்சம் கொஞ்சமாக தன்னளவிலும் சமூக அளவிலும் குழந்தைகளை ஆற்றல் வாய்ந்தவர்களாக மாற்றுவது TALi-இன் மிக முக்கியப் பணியாக இருக்கிறது.

    2003 ஆம் ஆண்டு சார்ஸ் (SARS) பெருந்தொற்று வந்தபோது வணிகத்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு அவை, மின்-வணிக மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த சமீபத்திய பெருந்தொற்று கல்வி மற்றும் பள்ளியின் செயல்பாடுகளில் பெரும் போராட்டமும் மாற்றங்களும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. TALi இதற்கு கருவிகளின் மூலமாகக் கிடைத்த மாற்று. உங்களுடைய குழந்தைகள் தங்களுடைய கவனத்தை முழுமையாக செலுத்தவும் தங்களு்ய திறன்களை அதன்மூலம் மேம்படுத்திக் கொள்ளவும் அவர்களுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திலும் துணையாக TALi இருக்கிறது. உங்களுடைய குழந்தைகளின் கவனத் திறன்கள் குறித்து விளக்கமாக அறிந்து கொள்ளவும் அதற்கு TALi கொடுக்கும் திறன் பயிற்சிகள் குறித்தும் மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக