ஜாய் என்ற பிராண்டில் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.
ஜாய் இ-பைக்ஸ் பிராண்ட்டை வார்ட்விசார்ட் இன்னோவேஷன் & மொபைலிட்டி என்ற நிறுவனம் சொந்தமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் நான்கு புதிய அதி-வேக மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் விற்பனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹர்ரிகேன் (சூறாவளி), தண்டர்போல்ட், ஸ்கைலைன் மற்றும் பீஸ்ட் என்ற பெயர்களில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நான்கு எலக்ட்ரிக் பைக்குகளில் மலிவானதாக ஸ்கைலைன் மாடல் ரூ.2.29 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதுவே ஹர்ரிகேன் & தண்டர்போல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ஒரே மாதிரியாக ரூ.2.33 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றை காட்டிலும் விலைமிக்க மாடலாக பீஸ்ட் ரூ.2.42 லட்சம் என்ற விலையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவற்றில் ஹர்ரிகேன் & பீஸ்ட் மாடல்கள் நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரகத்தை சேர்ந்த மோட்டார்சைக்கிகளாகும். அதுவே தண்டர்போல்ட் & ஸ்கைலைன் மாடல்கள் பேனல்களால் மூடப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளாகும்.
இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் டீசர் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகி இருந்த நிலையில் வதோதராவில் உள்ள வார்ட் விசார்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் சிறிய நிகழ்ச்சி மூலமாக இந்த நான்கு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆரம்ப
விலை கொண்ட ஸ்கைலைன் மாடலில் இருந்து ஆரம்பிப்போம். டிசி ப்ரஷ்லெஸ் ஹப் மோட்டாரை
கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் 72Ah லித்தியம் இரும்பு பேட்டரி
வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்பட்சமாக 5 கிலோவாட்ஸ் மற்றும் 230 என்எம்
டார்க் திறனை பெற முடியுமாம்.
இந்த எலக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 90கிமீ வேகத்திலும், சிங்கிள்-முழு சார்ஜில் 110கிமீ வரையிலும் செல்ல முடியும். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்பக்கத்தில் மோனோ-ஷாக் உடன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் செட்அப்-ஐ பெற்றுள்ள இந்த பைக்கின் எடை 150 கிலோ ஆகும்.
கிட்டத்தட்ட இதன் சஸ்பென்ஷன் & ப்ரேக் அமைப்புகளை தான் தண்டர்போல்ட், பீஸ்ட் பைக்குகளும் பெற்றுள்ளன. இந்த மூன்று மாடல்கள் உடனும் 10 ஆம்பியர் ஸ்மார்ட் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இவற்றின் பேட்டரியை 0-வில் 100 சதவீதம் சார்ஜ் நிரப்ப கிட்டத்தட்ட 9 மணிநேரங்கள் தேவைப்படும்.
இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் அம்சங்களை தான் ஹர்ரிகேன் இ-பைக்கும் கொண்டுள்ளது என்றாலும், இதில் சற்று குறைவான திறன் மதிப்பை கொண்ட 54 Ah பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் ரேஞ்ச் மற்றவைகளை காட்டிலும் சற்று குறைவாக 75கிமீ என கொண்டுவரப்பட்டுள்ளது.
இவற்றிற்கு முன்னதாக, ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து ஏற்கனவே இ-மான்ஸ்டர் என்ற பெயரில் ஒரு இ-மோட்டார்சைக்கிளும், வூல்ஃப், க்ளோப் & ஜென் நெக்ஸ்ட் நானு என்கிற பெயர்களில் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனையில் உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக