Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

ரகம் ரகமா., தரம் தரமா: ஆறு மாடல் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: ரொம்ப மலிவு விலை முதல் டாப் எண்ட் வரை!

Nokia G10, X10 and X20 leak ahead of announcement - GSMArena.com news

நோக்கியா சி10, நோக்கியா சி20, நோக்கியா ஜி10, நோக்கியா ஜி20, நோக்கியா எக்ஸ் 10, நோக்கியா எக்ஸ் 20 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

நோக்கியா ஜி, எக்ஸ், சி தொடர் ஸ்மார்ட்போன்கள்

நோக்கியா சி10, நோக்கியா சி20, நோக்கியா ஜி10, நோக்கியா ஜி20, நோக்கியா எக்ஸ் 10, நோக்கியா எக்ஸ் 20 ஸ்மார்ட்போன்கள் நேற்று நோக்கியா உரிமதாரரான எச்எம்டி குளோபல் நடத்திய மெய்நிகர் நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் நோக்கியா சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களானது நுழைவு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நோக்கியா ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இடைப்பட்ட பிரிவுகளிலும் நோக்கியா எக்ஸ் சீரிஸ் தொடர் ஸ்மார்ட்போன்கள் நிறுவனத்தின் சிறந்த தொடர் வரிசையிலும் பட்டியலிடப்படுகிறது. அதேபோல் நோக்கியா ஜி10 மற்றும் நோக்கியா ஜி20 மற்றும் நோக்கியா எக்ஸ் 10, நோக்கியா எக்ஸ் 20 ஆகியவை வழக்கமான ஆண்ட்ராய்டு 11 அனுபவத்தையும் நோக்கியா சி10 மற்றும் நோக்கியா சி20 ஸ்மார்ட்போன்களானது ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பு இயக்க ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோக்கியா எக்ஸ் 10 மற்றும் நோக்கியா எக்ஸ்20 ஆகியவை 5ஜி இணைப்பு ஆதரவோடு வழங்குகின்றன.

நோக்கியா புதுமாடல் விலை

நோக்கியா சி10, நோக்கியா சி20, நோக்கியா ஜி10, நோக்கியா ஜி20, நோக்கியா எக்ஸ் 10, நோக்கியா எக்ஸ் 20 ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் விலைகள் குறித்து பார்க்கையில் நோக்கியா சி10 1ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.7000 முதல் தொடங்குகிறது. இதில் 1 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்சேமிப்பு மற்றும் ஹை எண்ட் மாடலாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டும் உள்ளது. இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

வெவ்வேறு வேரியண்ட் வெவ்வேறு விலை

நோக்கியா சி20 ஸ்மார்ட்போனானது 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.7,900 ஆக இருக்கும் எனவும் இதில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டும் இடம்பெற்றுள்ளது. நோக்கியா ஜி10 விலை குறித்து பார்க்கையில், இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.12,300 ஆக இருக்கும். அதேபோல் இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டும் உள்ளது. நோக்கியா ஜி20 விலை குறித்து பார்க்கையில் இதன் அடிப்படை மாடலான 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.14,000 ஆக இருக்கிறது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டும் வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் தெரியவில்லை. நோக்கியா எக்ஸ் 10 விலை குறித்து பார்க்கையில், இதில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆகியவைகளோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப வேரியண்ட் விலை ரூ.27,400 ஆக இருக்கிறது. நோக்கியா எக்ஸ் 20 ஸ்மார்ட்போன்களானது ரூ.31,000 என்ற ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு விருப்பங்களோடு வருகிறது.

நோக்கியா சி10 சிறப்பம்சங்கள்

நோக்கியா ஜி10 ஏப்ரல் மாதத்திலும் இதர ஏணைய ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நோக்கியா சி10 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 400 நிட்ஸ் உச்சநிலை பிரகாச அம்சத்தையும் கொண்டிருக்கிறது. இதில் பாதுகாப்பு அம்சத்திற்கு 2டி பாண்டா கிளாஸ் பாதுகாப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் கோர் யுனிசோக் எஸ்சி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. அதேபோல் முன்பக்கத்தில் எல்இபிளாஷ் உடன் 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. இதில் 3000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

நோக்கியா சி20 சிறப்பம்சங்கள்

நோக்கியா சி20 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 400 நிட்ஸ் உச்சநிலை பிரகாச அம்சத்தையும் கொண்டிருக்கிறது. இதில் பாதுகாப்பு அம்சத்திற்கு 2டி பாண்டா கிளாஸ் பாதுகாப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் யுனிசோக் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது எல்இடி பிளாஷ் உடன் 5 மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் வருகிறது. அதேபோல் முன்பக்கத்தில் எல்இபிளாஷ் உடன் 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. இதில் 3000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

நோக்கியா ஜி20 சிறப்பம்சங்கள்

நோக்கியா ஜி20 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே அம்சத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. அதேபோல் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. இதில் 5050 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது.

நோக்கியா எக்ஸ் 10 சிறப்பம்சங்கள்

நோக்கியா எக்ஸ் 10 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.67 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே அம்சத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது துளை பஞ்ச் வடிவமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. அதேபோல் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. இது OZO ஆடியோ ஆதரவோடு வருகிறது. இதில் 4470 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி 52 கட்டமைப்போடு வருகிறது.

நோக்கியா எக்ஸ் 20 சிறப்பம்சங்கள்

நோக்கியா எக்ஸ் 20 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.67 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே அம்சத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது துளை பஞ்ச் வடிவமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. அதேபோல் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. இது OZO ஆடியோ ஆதரவோடு வருகிறது. இதில் 4470 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக