Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 8 ஏப்ரல், 2021

ஏலியன்களை விட ஒருபடி மேலேபோய் யோசித்த மனிதர்கள்.. தோன்றியது சாஸர் வடிவ ஏர்ஷிப்.. இது எதற்கு தெரியுமா?

 முதற்கட்டமாக சரக்கு விமானம்.. பின்னர் பறக்கும் நட்சத்திர ஹோட்டல்

ரஷியன் ஏர்ஷிப் உற்பத்தியாளர் நிறுவனமான ஏர்ஷிப் இனிஷியேடிவ் டிசைன் பீரோ ஏரோஸ்மேனா (AIDBA - Airship Initiative Design Bureau Aerosmena) என்ற நிறுவனம் உருவாகியுள்ளது. Aerosmena என்று அறியப்படும் இந்த நிறுவனம் வரும் 2024 ஆம் ஆண்டில், இந்த பறக்கும் தட்டு வடிவ 600-டன் பேலோடு கொள்ளளவு கொண்ட ஏர்ஷிப்பை வானில் பறக்கவிடத் திட்டமிட்டுள்ளது. எதற்காக இந்த பறக்கும் தட்டு உருவாக்கப்பட்டுள்ளது. விமானம் போல எந்த இறக்கைகள் இல்லாமல் இது எப்படி வானில் தடையின்றி பறக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

முதற்கட்டமாக சரக்கு விமானம்.. பின்னர் பறக்கும் நட்சத்திர ஹோட்டல்

முதலில் அனுபவம் வாய்ந்த ரஷ்ய விமான வடிவமைப்பாளர் ஓர்பி கோஸ்லோவ் தான் இந்த மாடலை வடிவமைத்து உருவாக்கினார். ஆனால், கடந்த ஆண்டு COVID-19 காரணமாக அவர் காலமானார். இந்த ஏர்ஷிப் முதற்கட்டமாக சரக்கு விமானமாகச் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது, பின்னர் இது எதிர்காலத்தில் உலகை சுற்றிவர பயன்படும் ஒரு பறக்கும் நட்சத்திர ஹோட்டலாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் போலத் தரையிறங்கும் உள்கட்டமைப்பைப் பொருட்படுத்தாமல் இது எந்த இடமாக இருந்தாலும் சரக்குகளை ஏற்றவும் மற்றும் இறக்கவும் அனுமதிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

விமானம் போல ஓடுபாதைகள் இதற்கு தேவையில்லை

இதன் பொருள் துறைமுகங்கள், சாலைவழிகள், விமான நிலையங்கள் அல்லது ஓடுபாதைகள் என்று எதுவும் இதற்குத் தேவையில்லை. இது நிலப்பரப்புக்கு மேல் சுற்றவும், புல்லிங் முறையைப் பயன்படுத்தி சரக்குகளைத் தரையில் இருந்து மீட்டெடுக்கவும் இது அனுமதிக்கிறது. "இதுபோன்ற வடிவமைப்பைப் பயன்படுத்தி பொருட்களின் போக்குவரத்து ஒரு எளிய முறை டெலிவரி சிஸ்டம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இது தளவாடங்கள் மற்றும் கிடங்குகளுக்கான செலவுகளைக் குறைக்க உதவும்" என்று ஏரோஸ்மேனா தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜி வி. பெண்டின் தெரிவித்தார்.

சாஸர் வடிவ ஏர்ஷிப்

ஏரோஸ்மேனா சரக்குக் கப்பலைப் பயன்படுத்தி, போக்குவரத்து விமானத்தின் ஆர்டர் அளவு கட்டணத்தை நாம் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். எளிதாக எந்த இடத்தில் வேண்டுமானாலும் தரையிறக்கங்களுக்கு இந்த சாஸர் வடிவ வடிவமைப்பு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார். வனப்பகுதி காட்டுத் தீயை அணைக்கவும், மலைப்பகுதிகளுக்கு பேலோடுகளை எளிதாகக் கொண்டு செலவும், டெலிவரி வழங்கவும் இது உதவும். சரி இந்த ஏர்ஷிப் எப்படி இறக்கைகள் இல்லாமல் பறக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

எப்படி இது இறக்கைகள் இல்லாமல் வானில் பறக்கிறது?

ஏர்ஷிப்பின் லிப்ட்டிங் வடிவமைப்பில் இரண்டு எரிவாயு அறைகள் வழங்கப்பட்டுள்ளது. 600 டன் கொள்ளளவு மாடலுக்கு, 620,000 கன மீட்டர் ஹீலியம் நடைமுறையில் தேவைப்படுகிறது, இவை ஏர்ஷிப்பின் "பூஜ்ஜிய" மிதப்புக்கு பயன்படுத்தப்படும். எட்டு ஹெலிகாப்டர் என்ஜின்களின் வெளியேற்றத்தால் 200 டிகிரி செல்சியஸ் (392 பாரன்ஹீட்) வரை வெப்பமான காற்று நிரப்பப்பட்ட ஒரு பெரிய பலூன் உடன் பேலோடை உயர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும். ஏரோஸ்மேனா 20 முதல் 600 டன் வரையிலான வெவ்வேறு திறன் கொண்ட மாடல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

மணிக்கு 250 கிமீ வேகம்

இந்த சாஸர் வடிவ ஏர்ஷிப்கள் 8,000 கிமீ (4,970 மைல்கள்) வரை, 250 கிமீ / மணி (155 மைல்) வேகத்தில் பறக்கும் படி வடிவமைத்து உருவாக்கப்படவுள்ளது. இன்னும் பல்வேறு நோக்கங்களுக்கான வெவ்வேறு மாடல்களை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெண்டின் நிறுவனம் தங்கள் விமானத்தின் 60-டன் பதிப்பை முதலில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விரைவில் பெரிய நகரங்களில் சாஸர் ஏர்ஷிப்

அதன் பிறகு "200 மற்றும் 600 கொள்ளளவு திறன் கொண்ட விமானங்களைப் பின்னர் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு பறக்கும் பெரிய ஆடம்பர ஹோட்டல் மூலம் மக்கள் உலகைச் சுற்றிவரவும் வாய்ப்புள்ளது என்று பெண்டின் கூறியுள்ளார். அனைத்தும் சரியாக நடந்தால், மாபெரும் சாஸர் வடிவிலான சரக்குக் கப்பல்கள் விரைவில் பெரிய நகரங்களில் வானில் காற்றுடன் காற்றாகப் பார்ப்பதை நாம் காணலாம்.

பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பம்

குறிப்பாக மாபெரும் ஏர்ஷிப்களில் பணிபுரியும் ஒரே நிறுவனமாக நாம் ஏரோஸ்மேனாவை மட்டும் கருத்தில் கொள்வது சரியானதல்ல, காரணம், கூகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரினின் விமான நிறுவனமும் இதுபோன்ற ஒரு மகத்தான மாதிரியை உருவாக்கி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. நிச்சயமாக இந்த தொழில்நுட்பம் ஒருநாள் நாம் அனைவரும் விடுமுறைக்கு உலகைச் சுற்றிவரும் யுஎஃப்ஒ போன்ற ஏர்ஷிப்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக