தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, வைகாசி 4
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
*திதி*
சுக்ல பக்ஷ நவமி - May 16 06:23 AM – May 17 08:49 AM
சுக்ல பக்ஷ தசமி - May 17 08:49 AM – May 18 11:23 AM
*நட்சத்திரம்*
பூரம் - May 16 06:14 PM – May 17 09:18 PM
உத்திரம் - May 17 09:18 PM – May 19 12:23 AM
*கரணம்*
கௌலவம் - May 16 07:34 PM – May 17 08:49 AM
சைதுளை - May 17 08:49 AM – May 17 10:06 PM
கரசை - May 17 10:06 PM – May 18 11:23 AM
*யோகம்*
வியாகாதம் - May 16 08:23 AM – May 17 09:21 AM
ஹர்ஷணம் - May 17 09:21 AM – May 18 10:24
*வாரம்*
வெள்ளிக்கிழமை
*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*
சூரியோதயம் - 6:04 AM
சூரியஸ்தமம் - 6:27 PM
சந்திரௌதயம் - May 17 1:50 PM
சந்திராஸ்தமனம் - May 18 2:16 AM
*அசுபமான காலம்*
இராகு - 10:43 AM – 12:16 PM
எமகண்டம் - 3:21 PM – 4:54 PM
குளிகை - 7:37 AM – 9:10 AM
துரமுஹுர்த்தம் - 08:33 AM – 09:22 AM, 12:40 PM – 01:30 PM
தியாஜ்யம் - 05:26 AM – 07:14 AM
*சுபமான காலம்*
அபிஜித் காலம் - 11:51 AM – 12:40 PM
அமிர்த காலம் - 02:28 PM – 04:16 PM
பிரம்மா முகூர்த்தம் - 04:28 AM – 05:16 AM
*ஆனந்ததி யோகம்*
ஸித்தி Upto - 09:18 PM
சுபம்
*வாரசூலை*
சூலம் - West
பரிகாரம் - வெல்லம்
_______________________________
*வெள்ளி ஹோரை*
காலை
06:00 - 07:00 - சுக் - சுபம்
07:00 - 08:00 - புத - சுபம்
08:00 - 09:00 - சந் - சுபம்
09:00 - 10:00 - சனி - அசுபம்
10:00 - 11:00 - குரு - சுபம்
11:00 - 12:00 - செவ் - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சூரி - அசுபம்
01:00 - 02:00 - சுக் - சுபம்
02:00 - 03:00 - புத - சுபம்
மாலை
03:00 - 04:00 - சந் - சுபம்
04:00 - 05:00 - சனி - அசுபம்
05:00 - 06:00 - குரு - சுபம்
06:00 - 07:00 - செவ் - அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
_______________________________
இன்றைய ராசி பலன்கள்
_______________________________
மேஷம்
சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : நம்பிக்கை மேம்படும்.
பரணி : குழப்பம் நீங்கும்.
கிருத்திகை : நெருக்கம் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆர்வமின்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : நன்மையான நாள்.
ரோகிணி : தெளிவு உண்டாகும்.
மிருகசீரிஷம் : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
மிதுனம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தெளிவு உண்டாகும். கலை துறைகளில் ஆதாயம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : தெளிவு உண்டாகும்.
புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
கடகம்
உடலில் இருந்துவந்த சோர்வு, களைப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உயர் கல்வி குறித்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : குழப்பம் விலகும்.
ஆயில்யம் : கலகலப்பான நாள்.
---------------------------------------
சிம்மம்
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் மௌனம் காக்கவும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : மௌனம் வேண்டும்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.
---------------------------------------
கன்னி
விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : தெளிவு ஏற்படும்.
---------------------------------------
துலாம்
எதிர்காலம் சார்ந்த கவலைகள் குறையும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும். அமைதி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : கவலைகள் குறையும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : ஒற்றுமை மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மறைமுகமான தொழில் சார்ந்த முதலீடுகள் குறித்த எண்ணம் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் மறையும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : முடிவுகள் கிடைக்கும்.
கேட்டை : பிரச்சனைகள் மறையும்.
---------------------------------------
தனுசு
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். இணையம் தொடர்பான துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். தந்தை வழி நட்புகளால் ஆதாயம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : திருப்தியின்மையான நாள்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும். வியாபார அலைச்சல்களால் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
உத்திராடம் : குழப்பம் உண்டாகும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------
கும்பம்
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளால் திருப்தி உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆதரவு கிடைக்கும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : வெற்றிகரமான நாள்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக