Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 மே, 2024

20-05-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


வைகாசி 7 - திங்கட்கிழமை 

🔆 திதி : மாலை 04.40 வரை துவாதசி பின்பு திரியோதசி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 04:09 வரை அஸ்தம் பின்பு சித்திரை.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 04.09 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 சதயம்

பண்டிகை

🌷 அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி.

🌷 மாயவரம் ஸ்ரீமாயூரநாதர் குதிரை வாகனத்தில் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

💥பிரதோஷம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 சாலை அமைப்பதற்கு உகந்த நாள்.

🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு நல்ல நாள்.

🌟 நோய்க்கு மருந்துண்ண சிறந்த நாள்.

🌟 சித்திரம் வரைய உகந்த நாள்.
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 03.49 AM முதல் 05.33 AM வரை

ரிஷப லக்னம் 05.34 AM முதல் 07.40 AM வரை 

மிதுன லக்னம் 07.41 AM முதல் 09.51 AM வரை 

கடக லக்னம் 09.52 AM முதல் 12.00 PM வரை 

சிம்ம லக்னம் 12.01 PM முதல் 02.02 PM வரை 

கன்னி லக்னம் 02.03 PM முதல் 04.02 PM வரை 

துலாம் லக்னம் 04.03 PM முதல் 06.07 PM வரை 

விருச்சிக லக்னம் 06.08 PM முதல் 08.19 PM வரை 

தனுசு லக்னம் 08.20 PM முதல் 10.26 PM வரை 

மகர லக்னம் 10.27 PM முதல் 12.21 AM வரை 

கும்ப லக்னம் 12.22 AM முதல் 02.04 AM வரை 

மீன லக்னம் 02.05 AM முதல் 03.45 AM வரை
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
 இன்றைய ராசி பலன்கள்
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
மேஷம்

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகள் சாதகமாக முடியும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை உண்டாக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பழைய சிக்கல்கள் குறையும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சாதகமாக முடியும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்

செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். கவின் கலைகள் மீது ஆர்வம் ஏற்படும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பெருமை நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் 

கிருத்திகை : அனுபவம் வெளிப்படும். 
ரோகிணி : மாற்றம் உண்டாகும். 
மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.
---------------------------------------
மிதுனம்

வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சுரங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்.

மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : அனுகூலம் ஏற்படும். 
---------------------------------------
கடகம்

சொத்து பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை ஏற்படும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வியூகங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.

புனர்பூசம் : முடிவு கிடைக்கும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் விலகும். 
ஆயில்யம் : மதிப்பு உயரும்.
---------------------------------------
சிம்மம்

கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபார அபிவிருத்திகான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். சாதனை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு  
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : தெளிவு பிறக்கும். 
பூரம் : வரவுகள் கிடைக்கும். 
உத்திரம் : அபிவிருத்தியான நாள்.
---------------------------------------
கன்னி

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வுகளினால் குழப்பம் ஏற்படும். கமிஷன் சார்ந்த விஷயங்களில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். இன்னல்கள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 

உத்திரம் : நெருக்கடிகள் உண்டாகும்.   
அஸ்தம் : குழப்பமான நாள்.
சித்திரை : திட்டமிட்டு செயல்படவும்.
---------------------------------------
துலாம்

குழந்தைகளை அரவணைத்துச் செல்லவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

சித்திரை : அரவணைத்துச் செல்லவும். 
சுவாதி : ஆதாயம் ஏற்படும். 
விசாகம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
விருச்சிகம்

எதிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உறவுகளின் வழியில் சாதகமான சூழல் அமையும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு  
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : ஆசைகள் நிறைவேறும். 
---------------------------------------
தனுசு

பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். திட்டமிட்ட காரியம் நடக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : மதிப்பு மேம்படும்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
மகரம்

நிர்வாகத் துறையில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : அறிமுகம் ஏற்படும். 
திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் அவசரமின்றி செயல்படவும். சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உண்டாக்கும். மனதில் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் 

அவிட்டம் : நெருக்கடிகள் உண்டாகும். 
சதயம் : மாற்றம் பிறக்கும்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும். 
---------------------------------------
மீனம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம் 

பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 
உத்திரட்டாதி : தந்திரங்களை அறிவீர்கள். 
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக