அரசாங்கத்திற்கு சொந்தமான டெல்கோ பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அறிமுக கால சலுகையாக கூகிள் பண்டல் சலுகையை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த சலுகையின் கீழ், BSNL பாரத் ஃபைபர், பயனர்களுக்கு கூகிள் நெஸ்ட் (Google Nest) மற்றும் கூகிள் மினி ஸ்மார்ட் (Google Mini Smart) சாதனங்களை மிகச் சிறந்த தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இந்த சலுகை 14 ஜூலை 2021 வரை 90 நாள் விளம்பர காலத்திற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள பயனர்கள் 799 அல்லது அதற்கு மேற்பட்ட பிராட்பேண்ட் திட்டத்தை பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த தள்ளுபடி சலுகையின் கீழ், பயனர்கள் நெஸ்ட் மினி அல்லது ககூல் நெஸ்ட் ஹப் ஸ்மார்ட் சாதனத்தை மாதத்திற்கு ரூ .99 மற்றும் ரூ .199 கட்டணத்தில் பெற முடியும். மேலும், இந்த சலுகையைப் பெற சந்தாவின் முழு தொகையையும் ஒரே தவணையில் பயனர்கள் செலுத்த வேண்டும்.
இதற்கு தகுதியான சந்தாதாரர்கள் பி.எஸ்.என்.எல் ஆன்லைன் போர்ட்டல் மூலம் வருடாந்திர, இரு ஆண்டு, மூன்று ஆண்டு திட்ட சந்தா கட்டணங்களை செலுத்தி, BSNL ஆன்லைன் தளத்தின் மூலம் பண்டலின் உறுப்பினராகலாம். Annual, biennial, triennial பிராட்பேண்ட் திட்டங்களுக்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஒரு முறை கட்டணமாக 10.5 மாதங்கள், 20.5 மாதங்கள் மற்றும் 30.5 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தலாம்.
கூகிள் நெஸ்ட் மினியின் தொகை தனியாக ரூ .4999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டங்களுடன், 13 மாதங்களுக்கு சந்தா செலுத்தும்போது ரூ .1287 விலையில் இந்த சலுகையைப் பெறலாம். இது மாதத்திற்கு ரூ .99 ஆகும். 12 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தின் உறுப்பினராக இருக்க விரும்புவரகளுக்கு கூகிள் நெஸ்ட் மினியின் விலை ரூ .1188 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் தங்கள் பிராட்பேண்ட் திட்ட வருடாந்திர சந்தா மற்றும் கூகிள் நெஸ்ட் மினியின் வருடாந்திர சந்தா ஆகியவற்றுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கூகிள் நெஸ்ட் ஹப் பற்றி பேசினால், பயனர்கள் 1999 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு நிலையான மாத கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கட்டணம் 10.5 மாதங்கள், 20.5 மாதங்கள் மற்றும் 20.5 மாதங்களில் செலுத்தப்பட வேண்டும். தனியாக கூகுள் நெஸ்ட் ஹப்பை பெற, நீங்கள் 9999 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களுடன், நெஸ்ட் ஹப்பின் விலை ரூ .2587 ஆக உள்ளது. பயனர் ரூ .799 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தை 13 மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பயனர் 12 மாதங்களுக்கு பிராட்பேண்ட் திட்டத்தை எடுத்தால், அவர் ஒவ்வொரு மாதமும் 199 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் நெஸ்ட் ஹப்பின் விலை ரூ .2388 ஆக உள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக