ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெற்ற ஸ்மார்ட்போன் மூலம் பி.எம்.டபிள்யூ காரை கூட லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாகஸ்மார்ட்போன்களில் உள்ள ஆப் பயன்பாடுகளின் நிறம், வடிவமைப்பு போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது இந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட்.
one ui, oxygen os இயங்குதளங்களில் உள்ள அம்சங்களை விட ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் லாக் ஸ்க்ரீன் நோட்டிபிகேஷனில் கூட மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் மிகப்பெரிய லாக் ஸ்க்ரீன் கடிகாரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் நீங்கள் நோட்டிபிகேஷனை கவனிக்க தவறினால், அது கடிகாரம் அருகில் தனித்துவமான முறையில் காண்பிக்கப்படும். மேலும் ஐகான்கள் முன்பை விட பெரிதாக இருக்கிறது. தேதி மற்றும் கடிகாரம் உள்ளிட்டவை டிஸ்ப்ளேவின் முன்புறத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
குறிப்பாக ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் புதிதாக பிரைவசி இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் கூகுள் கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் animation effects-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூன்று வகைகளில் பயன்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா வெர்ஷன் மட்டுமே வெளிவந்துள்ளது, இது முழுமையாக அறிமுகம் செய்யப்படும்போது நீங்கள் எதிர்பார்த்த பல்வேறு அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக